பட்டாசு வெடிப்பதில் தகராறு ஏற்பட்டு இளைஞர் கொலையான விவகாரம் : மதுரை ஆட்சியரை முற்றுகையிட்ட உறவினர்கள்!!

19 November 2020, 2:46 pm
Collector - Updatenews360
Quick Share

மதுரை : இளைஞரை கொலை செய்த கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காண்டை கிராமத்தை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் கடந்த நவம்பர் 14 தீபாவளி அன்று பட்டாசு வாங்க வடக்கம்பட்டி நோக்கி சென்ற போது நடுரோட்டில் நின்ற அப்பகுதியை சேர்ந்த அஜய், மாதேஷ், அழகர், தினேஷ்குமார் உட்பட 5 பேரை ஓரமாக நிற்கும்படி கூறினார்.

இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் முத்துப்பாண்டியின் பெரியப்பா முத்து விஜயநாதனை அந்த கும்பல் தாக்கியது. படுகாயத்துடன் சிகிச்சை பெற்ற முத்து விஜயநாதன் நேற்று இறந்தார். இதைதொடர்ந்து கொலை வழக்காக மாற்றப்பட்டது.

இருப்பினும் குற்றவாளிகளை கைது செய்யவும், புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்த ஆட்சியர் த.அன்பழகனின் காரை ஆட்சியர் அலுவலகம் முன்பு வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். போலீசார் அங்கு குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்

Views: - 0

0

0