ஆரணி ஆற்றில் சிக்கிய இளைஞர் : தீயணைப்பு துறையினர் முயற்சியால் உயிரோடு மீட்பு!!

30 November 2020, 2:14 pm
Man Rescue - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றின் வழியாக குறுக்கு பாதையில் கடக்க முயன்ற வாலிபர் நடு ஆற்றில் சிக்கியதால் பரபரப்பு. உயிருக்கு போராடியவரை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள மங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் வரதன் மகன் தேவராஜ் (வயது 30). பணி நிமித்தமாக ஆரணி பஜார் வீதிக்கு வந்த தேவராஜ் சொந்த கிராமமான மங்களத்திற்கு ஆரணி ஆற்றின் வெள்ளப்பெருக்கில் தரைப்பாலம் சாலையை கடக்க கடக்க முயன்றுள்ளார்.

அப்போது வெள்ளப்பெருக்கில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக ஆற்றின் நடுவே இருந்த மரக்கிளையை பிடித்த படி உயிருக்கு போராடியுள்ளார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த டேவிட், பரசுராமன் மணி ஆகியோர் ஆற்றில் நீந்திச் சென்று அவருக்கு உதவியுள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி கயிறு மூலம் சாதுரியமாக தேவராஜை உயிருடன் மீட்டனர்.

Views: - 0

0

0