ஆரணி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்கள் : 3 நாட்களுக்கு பிறகு இளைஞரின் சடலம் மீட்பு!!

29 November 2020, 12:41 pm
Youth Dead- Updatenews360
Quick Share

திருவள்ளூர் : ஆரணி ஆற்றில் நண்பர்களுடன் குளித்தபோது  வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு முட்புதரில் சிக்கியிருந்த  உடலை மூன்று நாட்களுக்குப் பிறகு தீயணைப்புத்துறை வீரர்கள்  மீட்டனர்

திருவள்ளூர் மாவட்டம் பெருவாயல் கிராமத்தை சேர்ந்தவர்  சொக்கலிங்கம்  கூலி தொழிலாளியான  இவரது மகன் ராஜாமணி (வயது 18) தனது நண்பர்கள் ஐந்து பேருடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்  புதுவாயல் மேம்பாலத்தில் இருந்து குதித்து ஆரணி ஆற்றில் வெள்ள நீரில் விளையாடினர்.

அப்போது ஆற்று நீரில்  அடித்து செல்லப்பட்டார். அதில் நான்கு பேரும் நீந்தி கரை சேர்ந்தனர் . அவர்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் கவரப்பேட்டை போலீசார் ராஜா மணி உடலை தொடர்ந்து மூன்று நாட்களாக தேடினர்.

இந்த நிலையில் அவரது உடல் முட்புதரில் சிக்கி வெளியே தெரிந்தது. இதையடுத்து தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கவரைப்பேட்டை போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திரமாநிலம் பிச்சாட்டூர் நீர்தேக்கத்தில் இருந்து மூன்று  நாட்களுக்கு முன்னர் வினாடிக்கு உபரி நீர் 7600 கன அடி திறக்கப்பட்டதால்  தொடர்ந்து ஆற்றில் இறங்கி யாரும் குளிக்கக்கூடாது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்திருந்த நிலையில்  இளைஞர் வெள்ளநீரில் அடித்து செல்லபட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது……

Views: - 21

0

0