கொலைபுரமாக மாறிய தாராபுரம் : இளைஞரின் சடலம் மீட்பு… அடுத்தடுத்து சம்பவங்களால் பொதுமக்கள் பீதி!!

Author: Udayachandran RadhaKrishnan
18 August 2021, 2:12 pm
Dharapuram Murder -Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் அருகே நள்ளிரவில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரதை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் விக்னேஷ். இவர் தாராபுரம் அருகே உடுமலை சாலை உள்ள திருமலை பாளையம் பகுதியில் தனியார் ரியல் எஸ்டேட் ஒன்றில் உள்ள காலி மனை இடத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அலங்கியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலின்பேரில் தாராபுரம் துணை கண்காணிப்பாளர் தனராசு ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணையை தொடங்கினர்.

அப்போது சம்பவ இடத்தில் கிடந்த கத்தி, வாள், வாகனங்கள் பழுது பார்க்கும் சிறிய ராடு கம்பி ஆகிய தடயங்களை கைப்பற்றினர். அதன் பிறகு திருப்பூரிலிருந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கொலையாளி விட்டு சென்ற தடயங்கள் உள்ளதாக என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கொலை செய்யப்பட்டு கிடக்கும் விக்னேஷ் எதற்கு மதுரையிலிருந்து திருமலை பகுதிக்கு எதற்காக வந்தார். முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணையை தொடங்கினர்.

விக்னேஷின் உடலை போலீசார் கைப்பற்றி தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து சம்பவ இடத்தில் கிடைத்த செல்போனை வைத்தும் அருகிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து தாராபுரம் பகுதியில் கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொது மக்களிடத்தில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 628

0

0