பெண்களை ஆபாசமாக சித்தரித்த “யூடியூபர்“ : முகத்தில் கரியை பூசி தாக்குதல்!!

28 September 2020, 4:11 pm
Youtouber Attack- updatenews360
Quick Share

கேரளாவில் பெண்கள் குறித்து ஆபாசமாக பதிவிட்ட யூடியூபர் மீது கரி ஆயில் வீசி தாக்குதல் நடத்திய மூன்று பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள மாநிலம் திருவந்தந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜய் பி நாயர் இவர் Youtube ல் சமீபகாலமாக பெண்களுக்கு எதிராக ஆபாசமாக கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார்.

சினிமா டப்பிங் கலைஞர் பாக்கிய லட்சுமி, சபரிமலை சென்று பரபரப்பை ஏற்படுத்திய பிந்து, அம்மணி, திருப்பி தேசாய், ரகான பாத்திமா, கனக துர்கா ஆகியோரை குறித்து ஆபாசமாக கூறி பதிவிட்டதை கண்டித்து யூடியூபர் மீது புகார் அளித்தனர். தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்டிருந்தார் .

இந்த நிலையில் மீண்டும் ஆபாசமாக கருத்துக்கள் பதிவிடவே ஆத்திரம் அடைந்த சினிமா டப்பிங் கலைஞர் பாக்கிய லட்சுமி தலைமையிலான மூன்று பெண்கள் யூடியூபர் விஜய் பி நாயர் தங்கி இருந்த லாட்ஜ்க்கு சென்று அறையில் இருந்த அவர் மீது கரி ஆயில் வீசி சரமாரி தாக்குதலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து விஜய் பி நாயர் கொடுத்த புகாரின் பேரில் பாக்கிய லட்சுமி உட்பட மூன்று பெண்கள் மீது லோப்டாப், செல்போன் போன்ற பொருட்கள் திருடி சென்றதாக கூறி வழக்கு பதிவு செய்து தம்பானுர் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண்கள் கரி ஆயில் வீசி தாக்குதல் நடத்தும் விடியோ சமூக வலைதங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

Views: - 6

0

0