வேலை நிறுத்தம் எதிரொலி: கோவையில் இரண்டாவது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்..!!

Author: Rajesh
29 March 2022, 1:35 pm

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க அமைப்புகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றும் இன்றும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் அங்கன்வாடி ஊழியர்கள் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் இன்சூரன்ஸ் ஊழியர்கள் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் சாலை மறியல் ஆகியவற்றை மேற்கொண்டனர்.

இரண்டாவது நாளான இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு முன்பு, மின்வாரிய ஊழியர்கள், ஏஐடியூசி, அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!