Flipkart மூலமாக தனது முதல் ஸ்மார்ட்போனை வெளியிடும் Nothing நிறுவனம்…அப்படி என்ன இருக்கு இதுல???

Author: Hemalatha Ramkumar
10 மே 2022, 6:51 மணி
Quick Share

லண்டனை தளமாகக் கொண்ட நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் (Nothing) தனது முதல் ஸ்மார்ட்போன் நத்திங் ஃபோன் (1)-யை இந்தியாவில் பிளிப்கார்ட்டில் கிடைக்கும் என்பதை செவ்வாயன்று உறுதிப்படுத்தியது.

UK இல் நத்திங் இன் நெட்வொர்க் பார்ட்னராக O2 இருக்கும் மற்றும் ஜெர்மனியில் டெலிகாம் டாய்ச்லேண்ட் தொலைபேசி 01-யின் நெட்வொர்க் ஆபரேட்டராக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நத்திங் ஃபோன் (1) குவால்காமின் ஸ்னாப்டிராகன் மொபைல் இயங்குதளம் மூலம் இயங்கும். இது நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாகவும், ஒட்டுமொத்த தயாரிப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் இரண்டாவது சாதனமாகவும் இருக்கும்.

“எங்கள் முதல் ஃபிளிப்கார்ட் விற்பனையின் போது இரண்டு நிமிடங்களுக்குள் இயர் (1) விற்பனையானது முதல் எங்கள் முதல் காலாண்டில் பிரீமியம் ட்ரூ வயர்லெஸ் இயர்பட் பிரிவில்
டாப் த்ரீ பிராண்டுகளுக்குள் நுழைவது வரை, இந்த புதிய பிராண்ட் மீது இந்தியா ஆர்வமாக உள்ளது என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம்.” என்று நத்திங் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளர் மனு ஷர்மா கூறினார். நத்திங் நிறுவனம் 2021 இல் இந்தியாவுக்குள் நுழைவதை அறிவித்தது.

“முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுடன் இணைந்து, ஸ்மார்ட்போன் சந்தையை வலம் வர எதிர்நோக்குகிறோம்” என்று நத்திங்கின் CEO மற்றும் இணை நிறுவனர் கார்ல் பெய் கூறினார்.

நிறுவனம் அதன் நத்திங் லாஞ்சர் (பீட்டா) ஆப்பரேட்டர் சிஸ்டம் இப்போது ஆண்ட்ராய்டு 11 மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து சாதனங்களுக்கும் கிடைக்கிறது என்று அறிவித்தது.

  • anna திமுக அரசுக்கு எதிராக ஒரு வரி கூட இல்லை.. சென்னை மழை குறித்து அண்ணாமலை கருத்து!!
  • Views: - 3555

    0

    0