இனி வாட்ஸ்அப்பில் இதையெல்லாம் ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது…!!!

Author: Hemalatha Ramkumar
5 October 2022, 7:08 pm
Quick Share

வாட்ஸ்அப் தனது பயனர்களுக்காக மற்றொரு புதிய அம்சத்துடன் கொண்டு வந்துள்ளது. WeBeta தகவலின்படி, வாட்ஸ்அப்பில் பகிரப்படும் படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்கிரீன் ஷாட் அல்லது ஸ்கிரீன் ரெக்கார்டிங் எடுப்பதைத் தடுக்கும் வகையில் புதிய வெர்ஷனை வெளியிடுகிறது.

வாட்ஸ்அப்பின் இந்த சமீபத்திய அம்சம் எவ்வாறு செயல்படுகிறது?
உங்கள் வாட்ஸ்அப் அக்கௌண்டில் இந்த அம்சம் இயக்கப்பட்டிருந்தால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது:

*யாராவது ஸ்கிரீன் ஷாட்டை எடுக்கும்போது, ​​அது உரிய நபருக்கு அறிவிக்கப்படாது. ஆனால் கூடுதல் தனியுரிமைக்காக ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் முயற்சி உடனடியாகத் தடுக்கப்படும்.

*ஒருமுறை படம் அல்லது வீடியோவைத் திறக்கும்போது திரையைப் பதிவுசெய்யும் முயற்சியும் ஆட்டோமேட்டிக்காக தடுக்கப்படும்.

*இந்த புதிய அம்சம் படங்கள் மற்றும் வீடியோக்களை ஒருமுறை மட்டுமே பார்ப்பதற்கு அனுமதிக்கப்படும் அம்சத்திற்கு மட்டுமே பொருந்தும். ஆகவே, டிஸ்அப்பியரிங் மெசேஜ்களைக் கொண்டிருந்தால் தாராளமாக நீங்கள் சாட்களின் ஸ்கிரீன்ஷாட்களை எடுக்கலாம்.

மேலும் எப்போதும் போல படங்களையும் வீடியோக்களையும் ஒருமுறை பார்க்கவோ, அப்லோடு செய்யவோ, சேமிக்கவோ முடியாது.
வேறொரு மொபைல் சாதனத்தைப் பயன்படுத்தி பெறுநர் நீங்கள் அனுப்பும் படத்தை புகைப்படம் எடுக்கலாம். எனவே மெசேஜ்களை ஒருமுறை பார்வைக்கு அனுப்பும்போது நீங்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

Views: - 1283

0

0