5G பெயரைச் சொல்லி ஏமாற்றும் மோசடிக்காரர்கள்… விழிப்புடன் இருங்கள்!!!

Author: Hemalatha Ramkumar
25 October 2022, 7:27 pm
Quick Share

நாட்டின் சில பகுதிகளில் 5G வெளியாகி கொண்டிருக்கும் இந்த சமயத்தில் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றுவதற்கான புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். மோசடி செய்பவர்கள் வோடஃபோன், ஏர்டெல் அல்லது ஜியோவின் வாடிக்கையாளர் சேவை மைய நிர்வாகிகளாக தங்களை காட்டிக் கொண்டு, எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் வாடிக்கையாளர்களிடம் அவர்களின் 4G சிம்களை 5G க்கு மேம்படுத்தி தர உதவுவதாக கூறுகிறார்கள்.

வாடிக்கையாளர்களுக்கு ஃபிஷிங் லின்குகளை அனுப்புவதன் மூலம் இந்த மோசடி
நடத்தப்படுகிறது. வங்கி பாஸ்வேர்ட் அல்லது OTP கள் போன்ற தனிப்பட்ட அல்லது முக்கியமான தகவல்களை பெற்று அவர்களின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுக்கிறார்கள்.

5G மோசடி: பாதுகாப்பாக இருப்பது எப்படி?
*மோசடி செய்பவர்கள் முதலில் இலக்கிடப்பட்ட பயனர்களுக்கு இணைப்பை அனுப்புவார்கள் என்பதால் விழிப்புடன் இருங்கள்.

*சிம் சேவைகளை மேம்படுத்த, லின்குகளை கிளிக் செய்யும்படி கேட்கப்படும்போது அவ்வாறு செய்ய வேண்டாம்.

*எந்தவொரு சைபர் குற்றத்தையும் புகாரளிக்க 1930 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கவும்.

இந்தியாவில் 5G தொழில்நுட்பம் அக்டோபர் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. சில தொழில்நுட்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டவுடன் 5G மொபைல் ஃபோனைக் கொண்ட நுகர்வோர் சேவையைப் பயன்படுத்தத் தொடங்கலாம். தற்போதைய நிலவரப்படி, மக்கள் 4G இன் அதே விலையில் 5G சேவைகளைப் பயன்படுத்தலாம். ஆனால் புதிய கட்டணங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மொபைல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Views: - 2916

0

0