கூட்டணியில் இருந்துட்டு… மதுவுக்கு எதிராக மாநாடா? திருமாவளவனை விளாசிய சீமான்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2024, 8:43 pm

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மதுவுக்கு எதிரான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் போராட்டத்தில் பங்கேற்க அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் கூறியதாவது:- பட்டியலினத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை வெளியேற்றி, அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை, அப்படியே கொடுக்க வேண்டும். அதுவே தமிழ் தேசியத்தின் விடுதலை. நீங்கள் செய்யவில்லை எனில், ஒருநாள் அதிகாரத்திற்கு வரும் போது, அதை நாங்கள் செய்வோம். வேளாளர் என்பதே எங்களின் குடிப்பெயர்.

எந்தத் தமிழ் சாதியில் பாண்டியன் எனும் பெயர் இல்லை என்பதை சொல்லுங்கள். இந்தியா ஒரு தேசமே இல்ல. மாநிலங்கள் மொழி வழியில் பிரிக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் இருந்த கல்விக்கொள்கையை நீ வகுத்து கொடுத்தியா? உன் புதிய கல்விக்கொள்கையில் ஒரு சிறப்பை சொல்லுங்க பார்ப்போம்.

புதிய கல்விக் கொள்கை குழந்தைகளுக்கு எழுதி வைக்கும் மரண சாசனம் என்று கல்வியயல் அறிஞர்கள் சொல்கிறார்கள். கல்வி எல்லாருக்கும் சமமாக இருக்கிறதா? தாய் மொழி கல்வி என்பார்கள். அப்பறம் எதுக்கு சமஸ்கிருதம் உள்ளே வருகிறது. திருச்சி ஏர்போர்ட்டில் எதுக்கு சமஸ்கிருதத்தில் கல்வெட்டு.

இதுதான் மொழி திணிப்பு. புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம், இந்தி இருக்கா, இல்லையா?மது ஒழிப்புக்கு எதிராக இருந்தவர் ராமதாஸ். டாஸ்மாக்கை மூடுபவர்களுடன் கூட்டணி என்று சொல்லியிருப்பதை பார்த்திருப்பீர்கள். அப்புறம் என்ன ஆனது? திருமாவளவன், அ.தி.மு.க.,வுடன் இணைந்து மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்துவார், பின்னர் மீண்டும் டாஸ்மாக்கை திறக்கத் தானே செய்வார்கள்.

தி.மு.க.,வுடன் இருந்து கொண்டு திருமாவளவன் டாஸ்மாக்கை எதிர்த்து போராட்டம் நடத்தலாமா? விற்பனை குறைவானதற்கு டாஸ்மாக் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்த அரசு தான் தி.மு.க., அரசு. ஒரு 5 ஆண்டு நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பு கொடுத்தால், தமிழக மீனவனை இலங்கை கடற்படை தொட்டு விடுவானா? என்று பார்த்துக்கலாம். அப்படி தொட்டால், அன்னைக்கே பதவி விலகிடுவேன் என கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!