வெளியானது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்… வழக்கம் போல மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி… முதலிடம் பிடித்த பெரம்பலூர்..!!

Author: Babu Lakshmanan
19 May 2023, 10:40 am
Quick Share

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் இன்று வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.39% ஆகும். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16%. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 1020 அரசு பள்ளிகளில் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ம் வகுப்பு பாட வாரியான தேர்ச்சி விகிதம்
தமிழ் – 95.55%
ஆங்கிலம் – 98.93%
கணிதம் – 95.54%
அறிவியல் – 95.75%
சமூக அறிவியல் – 95.83%

100/100க்கு மதிப்பெண் பெற்ற மாணவர்கள்
தமிழ் – 0
ஆங்கிலம் – 89
கணிதம் – 3,649
அறிவியல் – 3,584
சமூக அறிவியல் – 320

பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம்
அரசு பள்ளிகள் – 87.45%
அரசு உதவி பெறும் பள்ளிகள் – 92.24%
தனியார் சுயநிதி பள்ளிகள் – 97.38%

10ம் வகுப்பு தேர்ச்சி – டாப் 5 மாவட்டங்கள்:
பெரம்பலூர் – 97.67%
சிவகங்கை – 97.53%
விருதுநகர் – 96.22%
கன்னியாகுமரி – 95.99%
தூத்துக்குடி – 95.58%

Views: - 239

0

0