ஓபிஎஸ் மகன்கள் உட்பட 18 பேர் நீக்கம்… மக்களவையில் அதிமுக பலம் பூஜ்ஜியம்? இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 July 2022, 6:59 pm

ஓபிஎஸ் மகன்கள் உட்பட் 18 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்,

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.டி.பிராபகர் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஓபிஎஸ் மகன்கள் உட்பட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேரை கட்சியில் இருந்து நீக்கி இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நீக்கப்பட்டவர்கள் விவரம்:

முன்னாள் எம்எல்ஏ வெங்கட்ராமன்
முன்னாள் எம்.பி கோபால கிருஷ்ணன்
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன்
தேனி மாவட்ட செயலாளர் சையது கான்
பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராமசந்திரன்
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன்
புதுச்சேரி மேற்கு மாநில செயலாளர் ஓமசக்தி சேகர்
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்தீரநாத்
ஜெயபிரதீப்
கோவை செய்தி தொடர்பாளர் செல்வாராஜ்
மருது அழகுராஜ்
சென்னை புறகர் மாவட்ட துணை செயலாளர் அம்மன் வைரமுத்து
புரட்சி தலைவி பேரவை துணைச் செயலாளர் ரமேஷ்
தகவல் தொழில் நுட்ப பிரிவு திருச்சி மண்டல செயலாளர் வினுபாலான்
வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி
முன்னாள் மாவட்ட செயலாளர் சைதை எம்.பாபு
செயற்குழு உறுப்பினர் அஞ்சுலட்சுமி


இவர்கள் 18 பேரை நீக்கி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!