அறநிலையத்துறை அதிகாரி மீது புகார்: பாலியல் புகாரை முன்வைத்த 20 பெண்கள்: தட்டிக்கேட்டால் சஸ்பென்ட்….!!

Author: Sudha
11 August 2024, 2:58 pm

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் இணை ஆணையராக பணிபுரிந்து வந்த செல்லத்துரை அண்மையில், மதுரை மண்டல இந்து அறநிலையத்துறையின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தக்காராக சுமார் 18 ஆண்டுகள் பதவி வகித்த கருமுத்து தி.கண்ணன் உடல்நலக்குறைவால் கடந்த மே மாதம் 23-ம் தேதி உயிரிழந்தார்.

அதற்குப் பின் இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் க.செல்லத்துரையை கோயில் தக்காராக நியமித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டது.

இந்நிலையில், அறநிலையத்துறையின் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களிடம், செல்லத்துரை பாலியல் ரீதியாக அத்துமீறி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தட்டிக்கேட்கும் பெண்களை சஸ்பெண்ட் செய்துவிடுவேன் எனக்கூறி செல்லத்துரை மிரட்டுவதாகவும் புகாரளிக்கப்பட்டுள்ளது.

உயர் அதிகாரிகள் ரகசிய விசாரணை செய்தால் மேலும் சில பெண்கள் வெளியில் வந்து புகாரளிப்பார்கள் எனவும் பரபரப்பு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

இந்து அறநிலையத்துறை ஆணையரிடமும், இந்து அறநிலையத்துறை விசாரணை கமிட்டியிடமும் புகார் செய்திருக்கும் பெண்கள், புகாரின் நகலை இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கும் அனுப்பி இருப்பதாக சொல்லப்படுகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!