4 மணி நேரம் நடந்த ரகசிய ஆலோசனை.. அதிமுகவில் இணைகிறதா பா.ம.க? எடப்பாடி பழனிசாமி அதிரடி முடிவு!

Author: Udayachandran RadhaKrishnan
8 March 2024, 10:01 am
admk
Quick Share

4 மணி நேரம் நடந்த ரகசிய ஆலோசனை.. அதிமுகவில் இணைகிறதா பா.ம.க? எடப்பாடி பழனிசாமி அதிரடி முடிவு!

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, ஆளும் திமுக தங்களின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரமாக நடத்தி வருகிறது. அதேவேளையில், அதிமுகவும், பாஜகவும் தனித்தனியே கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக – பாமக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பாஜக சார்பில் ஜிகே வாசன் முன்நின்று நடத்திய இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. 12 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா இடத்தை பாமக கேட்பதாகவும், பாஜக 7 இடங்களை மட்டுமே அளிக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதனை பாமக ஏற்காததால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

ஆனால் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக எம்பி சிவி சண்முகம் சந்தித்து பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாமக கூட்டணி தொடர்பாக ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகயுள்ளது. பாமக போட்டியிட விரும்பும் தொகுதி எண்ணிக்கை மற்றும் தொகுதிகளின் விபரம் குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியானது.

இந்த சந்திப்புக்கு பின் பாமக தனது விருப்பத்தை பாஜகவுடன் கூறியுள்ளது. ஆனால் அவர்களுடனான கூட்டணி பேச்சுவார்த்தையும் இழுபறியில் உள்ளது.

இந்த நிலையில் அதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவினர் சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி உடன் ஆலோசனை நடத்தியது. ஆலோசனையில் கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் 4 மணி நேரம் நீடித்த ஆலோசனையில், தேமுதிக புதிய தமிழகம் கட்சி உடனான பேச்சுவார்த்தையில் பேசப்பட்டவை குறித்தும், பாமக உடனான பேச்சுவார்த்தை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Views: - 123

0

0