49 கோப்புகள் மீண்டும் செலக்ட்? ஆளுநருடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு : அமைச்சர்கள் பரபரப்பு விளக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2023, 7:46 pm
RN Ra
Quick Share

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக கூறி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இருவரும் அமர்ந்து பேசலாமே? என யோசனை வழங்கியது.

இதையடுத்து, ஆளுநர் ஆர்என் ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

கவர்னருடனான சந்திப்பின்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு,ரகுபதி, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சந்திப்பு நிறைவடைந்ததை அடுத்து இகு குறித்து அமைச்சர் ரகுபதி விளக்கம் ளித்துள்ளார், அதில், முன்னாள அமைச்சர்கள் கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் தொடர்பான கோப்புகளுக்கு அனுமதி கோரியுள்ளதாகவும், அண்ணாவின் பிறந்தநாள் அன்று கைதிகள் விடுதலை தொடர்பாக 68 கோப்புகளுக்கு மட்டுமே ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.

எஞ்சிய கோப்புகளுக்கு அனுமதி தரவில்லை, நிலுவையில் உள்ள 49 கோப்புகளுக்கு அனுமதி தருமாறு கோரிக்கை மனுக்களாக ஆளுநரிடம் வழங்கியுள்ளதாக கூறினார்.

Views: - 242

0

0