ஆவின் பால் பாக்கெட்டில் மு.க ஸ்டாலின் புகைப்படம் : காலங்காத்தால இவங்க மூஞ்சி முழிச்சா விளங்குமா? கலாய்த்த ஜெயக்குமார்!!
Author: Udayachandran RadhaKrishnan30 October 2023, 11:40 am
ஆவின் பால் பாக்கெட்டில் மு.க ஸ்டாலின் புகைப்படம் : காலங்காத்தால இவங்க மூஞ்சி முழிச்சா விளங்குமா? கலாய்த்த ஜெயக்குமார்!!
அதிமுகவின் 52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை ஓட்டேரியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது..இதில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது எம்.ஜி.ஆர் பாடல்கள் ஒலிக்கப்பட்டு , மேடையில் கலைக்குழுவினர் நடனங்கள் ஆடினர்.
ஜெயக்குமார் மேடையில் பேசும் போது, திமுகவிற்கும் , நமக்கும் என்ன வித்தியாசம் என்றால் , எந்த கூட்டத்திலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை திமுக வழங்க மாட்டார்கள்.
திமுகவிற்கு வசூல் செய்து தான் பழக்கம். ஆளும் வளரனும் , அறிவும் வளரனும் அது தான்டா வளர்ச்சி எம்.ஜி.ஆர் பாடலை சுட்டி காட்டி பாடல் பாடிய ஜெயக்குமார், ஸ்டாலினும் , உதயநிதி ஸ்டாலினும் ஆள் மட்டும் தான் வளர்ந்து இருக்கிறார்கள் , அறிவு ஒன்னும் வளர்ல ..
இலங்கையில் 1 அரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்…
அப்போது காங்கிரஸ்க்கு திமுக ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் 1 அரை லட்சம் தமிழர்கள் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள்…
பொதுமக்களுக்கு அந்தந்த தொகுதியில் புகார் பெட்டி வைக்கப்படும் என்று மு.க ஸ்டாலின் சொன்னார்..இப்போது நீங்கள் ஏதாவது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கிறார்களா , அத்தனையும் பொய்…
தமிழ்நாட்டில் கவர்னருக்கு பாதுகாப்பு இல்லை..ஒரு நபர் ஏற்கனவே குற்றம் செய்திருந்து சிறைக்கு சென்று வந்த பின்பு , மீண்டும் அந்த நபரின் நடவடிக்கை குறித்து உளவுத்துறையினர் சொன்னால் அதையும் கண்டு கொள்ளாமல் உதாசினப்படுத்துவது.
மாடு முட்டி ஒருவர் இப்போது இறந்து போயிருக்கிறார்.. ஆனால் , மேயரோ அவர் மாடு முட்டி இறக்கவில்லை..உடல் நலக் குறைவால் தான் உயிர் இறந்தார் என்று சொல்கின்றனர்.
ஆவின் பால் பாக்கெட்டில் மு.க ஸ்டாலின் புகைப்படம் குறித்து கலாய்த்த ஜெயக்குமார், காலையில் எழுந்தவுடன் இவங்க முகத்தில் முளிக்கனுமா ? இவங்க முகத்தில் காலையில் முளித்தால் அன்றைய நாள் விளங்குமா ?
கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பாட்டில் வீசப்பட்ட விவகாரம்..கூட்டணி கட்சி அலுவலகத்துக்கே பாதுகாப்பு இல்லை. மரத்தில் கம்புளி பூச்சி இருக்கிறது அதான் பாட்டில் வீசப்பட்டுள்ளது என்று காவல் துறை விளக்கம் கொடுத்துள்ளது. இது நம்புகிற மாதிரியா இருக்கு.
நாங்கள் அடக்கு முறைகளுக்கும் அஞ்ச மாட்டோம்..வழக்குகளுக்கும் அஞ்ச மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.