கலாஷேத்ரா கல்லூரி மாணவர்கள் எடுத்த அதிரடி முடிவு : மத்திய, மாநில அரசுகளுக்கு போன பரபரப்பு கடிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 March 2023, 9:11 am

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் மாணவிகள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாணவர்கள் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய கலாசார அமைச்சகத்திற்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்தில், பாலியல் தொல்லை அளித்துவரும் பேராசிரியர் உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வரை போராட்டம் நடைபெறும் எனவும் மாணவர்கள் அதில் தெரிவித்துள்ளனர். நேற்றி இரவும் தொடர்ந்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரிக்கு ஏப்ரல் 6-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவிகள் கல்லூரியில் இருந்து வெளியேறாமல், நள்ளிரவு 2 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!