அடக்க நினைத்தால் அடங்கமறு!! இப்ப சொல்கிறேன்; த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு… U-Turn அடித்த மன்சூர் அலிகான்…!!

Author: Babu Lakshmanan
24 November 2023, 12:16 pm

நடிகை த்ரிஷா விவகாரத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், நடிகர் மன்சூர் அலி கான் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து, அவரது பேச்சுக்கு நடிகை த்ரிஷா உள்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அவர் ஊடகங்களின் முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உள்பட பலரும் அறிவுறுத்தினர்.

இதனிடையே, இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தது. அதன்பேரில் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, முதலில் உடல்நலக்குறைவால் ஆஜராக கால அவகாசம் கோரினார். பின்னர், மாலையில் அவர் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் முன்பு ஆஜரானார்.

இந்த நிலையில்‌ நடிகை த்ரிஷாவிடம்‌ மன்னிப்பு கேட்டு நடிகர்‌ மன்சூர்‌ அலிகான்‌ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்‌. அந்த அறிக்கையில்‌, அவர்‌ தெரிவித்து இருப்பதாவது:- ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமீன்றி போரில்‌ நான்‌ வெற்றி? பெற்றுவிட்டேன்‌ ! எனக்காக வாதிட்ட தலைவர்கள்‌, நடிகர்கள்‌, ஊடகவியலாளர்கள்‌ யாவோர்க்கும்‌ நெஞ்சார்ந்த நன்றிகள்‌. எதிர்த்து என்னை கண்டித்த மானுடர்களுக்கும்‌
பணிவான வணக்கங்கள்‌. கலிங்கத்துப்‌ போர்‌ முடிந்தது. லட்சக்கணக்காணோர்‌ மாண்டு கிடக்க, சாம்ராட்‌ அசோகனின்‌ இதயத்தில்‌ ரத்தம்‌ வடிந்து அஹிம்சையை தழுவினான்‌. ஆம்‌. மனசாட்சியே இறைவன்‌.

காவல்‌ அதிகாரி அம்மையார்‌ த்ரிஷாவின்‌ மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச்‌ சொல்ல. ‘ஐயஹோ எனக்கும்‌ வருத்தம்தான்‌” என வந்துவிட்டேன்‌. யதார்த்த நிலை! சட்டம்‌ வென்று வெளியே வந்தால்‌. மீண்டும்‌ கோரப்பசியுடன்‌ கோழிக்‌ குஞ்சை கவ்வ வரும்‌ வல்லூறுகளாக ஊடகம்‌ துரத்துகிறது !! ஜனநாயகத்தின்‌ நான்காவது தூண்‌, மணிப்பூர்‌, ஹாத்ரஸ்‌ பெண்‌ பல்கீஸ்‌ பானு, நீட்‌ அனிதாக்கள்,. வாச்சாத்தி வன்கொடுமைகள்,‌ நித்தம்‌ மதக்கலவர வன்கொடுமைகளை சாட்டையடியாக கேள்வி கேட்க மறுக்கிறது.

எனது இளமைக்காலம்‌ யாவும்‌ திரைத்துறையில்‌ இழந்து விட்டேன்‌. திமிங்கலமாக உலா வந்தாலும்‌, பாத்திரங்கள்‌ சிறு மீன்களாகத்தான்‌ அமைந்தது. இனி வரும்‌ நாட்களாவது ஆக்கப்பூர்வமாக உழைக்க இறைவா சக்தியை கொடு! என்‌ மக்கள்‌, மலடான பளபளக்கும்‌ ரசாயண உரமேற்றப்பட்ட காய்கறிகளை உண்டு. விவசாயிகள்‌ வீணர்களாக ஆக்கப்பட்டு, விளை நிலங்கள்‌ கரிக்கட்டைகளாக மாறும்‌. கனிமங்கள்‌, மலை, ஆறு காணாடிக்கப்பட்டு, வேலையற்றவர்களாய்‌ நிற்கிறோம்‌.

mansoor

குழந்தைகள்‌ கசடறகற்க, சூரியன்‌ மறையும்‌ முன்‌ குடும்பம்‌ காக்க மாங்குமாங்கு என்று உழைப்போம்‌. மாதத்தில்‌ 10 நாள்‌ கடுமையாக உழைத்தால்தான்‌ கரண்ட்‌ பில்‌ கட்ட முடியும்‌. மீதி நாள்‌ GST, ST டோல்கேட்‌, பெட்ரோல்‌, கேஸ், ஸ்கூல்‌ பீஸ்‌, மளிகை வாங்க என, ஒன்றும்‌ மிஞ்சமாட்டேங்கிறது. இன்னும்‌ கடுமையாக ஏதாவது சம்பளத்திற்கு வேலை செய்தால்தான்‌ நாம்‌ அதானிக்கு கப்பம்‌ கட்ட முடியும்‌. அதானிந்தியா மார்பில்‌ தவலும்‌ குழந்தையுடன்‌, இளமங்கை இளவரசியை கட்டிலில்‌ விட்டுச்செல்ல நாம்‌ புத்தனில்லை. ஆம்‌ !

பெண்ணிலிருந்துதான்‌ மனிதன்‌ பிறக்கிறான்‌. தாயின்‌ காலடியில்‌ சொர்க்கம்‌. தாய்க்கு சேவை செய்‌ என்றார்‌ நபிகளார்‌. பெண்மை புனிதம், காரணத்தோடுதான்‌ ஆண்மையை அழியுங்கள்‌ என்றார்‌ பெரியார்‌. எனை ஈன்ற சபூரா மாள்‌ பாம்புக்கடி, பூரான்‌, தேள்‌ கடித்து வருவோர்க்கு 8 வேளை தொழுது, ஒதி, ஊதி, கிராம்பு நீர்‌ கொடுத்து, நற்கிருபைகள்‌ செய்தவர்‌.

சினிமா பார்க்கவிடாது 10 ஆம்‌ வகுப்புவரை வளர்த்தவர்‌. இனிமேலும்‌ இம்மண்ணின்‌ மீட்சிக்கு, சகோதரத்துவத்துடன்‌ உழைக்க அருள்‌ புரிவாய்‌ இறைவா !! இறையச்சமே நம்‌ குழந்தைகளின்‌ நல்வாழ்க்கையை அருளும்‌ !

எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு ! இல்லறமாம்‌ நல்லறத்தில்‌ நின்‌ மாங்கல்யம்‌ தேங்காய்‌ தட்டில்‌ வலம்வரும்போது நான்‌ ஆசீர்வதிக்கும்‌ பாக்கியத்தை இறைவன்‌ தந்தருள்வானாக !! ஆமீன்‌, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!