சாப்பிட மட்டும் வருபவர்கள் தயவு செய்து மன்னிக்கவும்… பாஜகவில் இருந்து நடிகை கவுதமி விலகல் … ராம சீனிவாசன் விமர்சனம்..!!!

Author: Babu Lakshmanan
23 October 2023, 2:38 pm
Quick Share

நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகிய நிலையில், இது தொடர்பாக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடுமையான விமர்சனங்களை வைத்துவிட்டு அவர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். தனது வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத நெருக்கடியான கட்டத்தில் இருப்பதாகவும், தன் நம்பிக்கைக்கு துரோகம் செய்து, என் வாழ்நாள் சேமிப்பை ஏமாற்றி விட்டார்கள் எனக் கூறி அவர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கவுதமியின் விலகல் பாஜக பெண் நிர்வாகிகளான வானதி சீனிவாசன், குஷ்பு உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் கவுதமியின் விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் டிவி சேனலுக்கு கூறியிருப்பதாவது;- அவரது எந்த அரசியல் பணிக்காகக் கட்சி துணை நிற்கவில்லை என்று எனக்குப் புரியவில்லை. நிலத்தை அபகரிப்பது என்பது சட்ட விரோதமான செயல். நிலத்தை அபகரித்தது குறித்து அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாரா..? இது சட்ட ரீதியான பிரச்சினை தான். இதில் கட்சி எங்கே வந்தது.

இந்த நில விவகாரத்தில் யார் மீது நியாயம் இருக்கிறது..? என்பதெல்லாம் கட்சிக்கு எப்படித் தெரியும். நில அபகரிப்பு விவகாரத்தில் கட்சி தலையிட முடியாது. அவர் ஏன் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை. கட்டப் பஞ்சாயத்து செய்வது கட்சியின் வேலை இல்லை.
இதற்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம்.

யார் வேண்டுமானாலும் கட்சியில் இருந்து சேரலாம், விலகிக் கொள்ளலாம். அப்படி கட்சியில் இருந்து விலகுவதாக இருந்தால் தாராளமாக விலகிக் கொள்ளலாம். அதிலும் 20, 25 ஆண்டுகள் கட்சியில் இருக்கிறேன் என்கிறீர்கள். உங்கள் பங்களிப்பிற்கு நன்றி என மட்டும் சொல்லிக் கொள்கிறேன் வாழ்த்துகள், எனக் கூறினார்.

தொடர்ந்து, “கட்சிக்கு சமைக்கவும், சாப்பிடவும் வருபவர்கள் தேவை ; சாப்பிட மட்டும் வர விரும்புபவர்கள் தயவு செய்து மன்னிக்கவும்,” என ராம சீனிவாசன் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 439

0

0