அரசுக்கு எதிராக முதல் ஆட்டம் : அதிரடி காட்டிய அதிமுக… ஓரங்கட்டப்பட்ட ஆடியோ அரசியல்!!

Author: Babu
28 July 2021, 9:48 pm
ttv dinakaran - cover updatenews360
Quick Share

திடீர் டெல்லி பயணம்

அண்மையில் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வமும் டெல்லி சென்று பிரதமர் மோடியையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துப் பேசினர். இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்தது. அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்ற கேள்வியும் எழுந்தது.

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்க கூடாது, தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்கவேண்டும் என்பதை பிரதமரிடமும், உள்துறை அமைச்சரிடமும் வலியுறுத்தியதாக எடப்பாடி பழனிசாமியும் ஓ. பன்னீர்செல்வமும் தெரிவித்தனர்.

eps - ops - meet - updatenews360

இதற்கிடையே சசிகலா, தினகரன் இருவரையும் மீண்டும் அதிமுகவுக்குள் கொண்டு வரவேண்டுமென்று சில ஆடிட்டர்கள் வழக்கம்போல டெல்லி பாஜக மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்தாக கூறப்படுகிறது. எனவே மோடியையும், அமித்ஷாவையும் சந்தித்தபோது அதிமுக தலைவர்கள் இருவரிடமும் இதுபற்றி விவாதிக்கப்பட்டிருக்கும் என்ற செய்திகளும் ரெக்கை கட்டி பறந்தன. எனினும், தாங்கள் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று அதிமுக தலைவர்கள் இருவரும் திட்டவட்டமாக மறுத்தனர்.

உரிமைக்குரல் போராட்டம்

2 நாள் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பியபோது, அவர்களுக்கு இன்னொரு முக்கிய நிகழ்வு இருந்தது. அது, ஏற்கனவே அதிமுக ஜூலை 28-ம் தேதி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து உரிமைக் குரல் முழக்க போராட்டம் நடத்தப்படும் என்பதுதான்.

2021 தேர்தலுக்கு முன்பாக திமுக அளித்த வாக்குறுதிகள் மக்களுக்கு பெரும்பாலும் நினைவில் இருக்கும். அதில் மிக முக்கியமாக பள்ளி இறுதியாண்டில் டாக்டர் கனவுடன் பயிலும் மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் விதமாக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உரிமைத் தொகை 1000 ரூபாய், கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய், பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்பு, டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பு என ஏராளமான கவர்ச்சி உறுதிமொழிகள் இடம் பெற்றிருந்தன.

இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்துத்தான் அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய உரிமைக்குரல் முழக்க போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்து இருந்தது. அதன்படி மாநிலம் முழுவதும் இன்று 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் அதிமுகவினர் தங்களுடைய வீடுகளின் முன்பாக கூடி நின்று, நீட் தேர்வு ரத்து சட்டம் எங்கே?… அரியலூர் அனிதாவின் ஆன்மா சும்மா விடாது! 1000 ரூபாய் உதவித்தொகை, சிலிண்டர் மானியம் 100 என்னாச்சு?…பெட்ரோல் டீசல் விலையை ஏன் குறைக்கல? என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

சென்னை பூந்தமல்லியில 100க்கும் மேற்பட்ட திரண்ட அதிமுகவினரில் 10 இளைஞர்கள் சாலையின் நடுவே குட்டிக்கரணம் அடித்தும், ஒப்பாரி வைத்து அழுதும் பொதுமக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தனர். பல இடங்களில் கருப்பு சட்டைகளை அணிந்தும் தங்களுடைய எதிர்ப்பை அதிமுகவினர் தெரிவித்தனர்.

ட்விட்டரிலும் #திமுக_ சொன்னீங்களே_ செஞ்சீங்களா? என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்டாது.

மக்களை திசைதிருப்ப முயற்சி

திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தமிழக அரசை எதிர்த்து அதிமுக நடத்திய மாபெரும் முதல் கண்டன ஆர்ப்பாட்டம் இதுவாகும்.

சேலத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, தேனி மாவட்டம் போடி நகரில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்தது.

eps 1-updatenews360

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக சார்பில் 505 அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதியாக கூறினர். அதில், முக்கியமான சில விஷயங்களை கூட திமுக நிறைவேற்றவில்லை. பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதும் முதல் வேலையாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறியிருந்தார். தேர்வை ரத்து செய்யாமல் கண்துடைப்பிற்காக கமிஷன் ஒன்றை அமைத்துள்ளனர்.

அதேபோல் கல்விக்கடன் ரத்து, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும், பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.4 குறைக்கப்படும், 5 சவரனுக்கு குறைவான வங்கி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும், மாதந்தோறும் மின்கட்டணம் வசூல் செய்யப்படும் போன்ற பல வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், இதுவரை அது சம்பந்தமாக எந்த அறிவிப்பும் வரவில்லை. இது சம்பந்தமாக மக்கள் கொந்தளிப்புடன் கேள்வி கேட்கும் நிலையில் உள்ளதால், மக்களை திசைதிருப்ப அதிமுக முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை செய்கின்றனர், பொய் வழக்கு போடுகின்றனர்” என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.

கிண்டலுக்குள்ளான டிடிவி

இதற்கிடையே திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன், “அதிமுக தொடங்கியது முதல் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் சிறைக்கு செல்லும் வரை சசிகலா என்கிற ஒற்றை தலைமையில்தான் அ.தி.மு.க இருந்திருக்கிறது. தற்போது அது மாறி உள்ளது. மீண்டும் அது சரியாகும். அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய இலக்கு. அதை நோக்கித்தான் நாங்கள் பயணிக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

ttv dinkaran - updatenews360

“தினகரன் நாங்கள்… நாங்கள் என்று வார்த்தைக்கு வார்த்தை கூறுவது அமமுக நிர்வாகிகளை அல்ல என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. தனது சித்தி சசிகலாவையும் சேர்த்தே குறிப்பிடுகிறார் என்பதும் புரிகிறது. ஒரு கட்சியை நடத்திக் கொண்டே இன்னொரு கட்சியை கைப்பற்றி அதில் சவாரி செய்யத் துடிக்கும் ஒரே நபர் இந்த உலகில் டிடிவி தினகரனாகத்தான் இருப்பார்” என்று அரசியல் விமர்சகர்கள் கிண்டலாக குறிப்பிடும் அளவிற்கு அவருடைய நிலைமை படுகேவலமாகி விட்டது.

ஓபிஎஸ் கொடுத்த பலத்த அடி

இதற்கிடையே சசிகலா, தினகரன் ஆதரவாளர்களால் குறிப்பிட்ட சில ஊடகங்களில் திட்டமிட்டு பரப்பப்பட்டு வரும் வதந்திகள் குறித்தும் சசிகலாவின் ஆடியோ பேச்சு பற்றியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திடம், கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் அளித்த பதில், சசிகலா, தினகரன் தரப்பினர் கிளப்பிவிடும் புரளிகளுக்கு நெற்றியடியாகவும், ஆப்பு வைப்பதாகவும் அமைந்து இருந்தது.

அவர் கூறும்போது, “அதிமுக ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்டு வருகிறது. எனவே அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது. கட்சியை தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது. நான்கரை ஆண்டுகளாக நானும், பழனிசாமியும் ஒன்றாக இணைந்து, தனிப்பட்ட குடும்பம் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையில் அதிமுகவை வழிநடத்தி வருகிறோம். எந்த நோக்கத்திற்காக அதிமுக தொடங்கப்பட்டதோ, அந்த நிலை தொடரும்” என்று அதிரடி காட்டினார்.

OPS Slams Dmk -Updatenews360

அதாவது, எந்த வழியில் அதிமுகவிற்குள் நுழைய முயன்றாலும் சசிகலாவும், தினகரனும் விரட்டியடிக்கப் படுவார்கள் என்பதை ஓ. பன்னீர்செல்வம் தெள்ளத்தெளிவாக அறிவித்து இருக்கிறார். ஓபிஎஸ்சை சரி கட்டிவிட்டால், அதிமுகவிற்குள் நுழைந்து கட்சியை கைப்பற்றி விடலாம் என்று மனக்கோட்டை கட்டி இருந்த சசிகலாவுக்கும், தினகரனுக்கும் இது பேரிடியாக அமைந்துள்ளது. அடுத்ததாக அவர்கள் இருவரும் தொடர்ந்து ஊடகங்களில் பரப்பி வந்த
புரளிகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துவிட்டது.

இதுபற்றி அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறும்போது, “இன்று ஒரே கல்லில் அதிமுக இரண்டு மாங்காய் அடித்துள்ளது. அதிமுகவின் ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் நடந்துள்ளது. கொரோனா ஊரடங்கு இருந்தாலும் கூட அதிமுகவினர் பெருமளவில் திரண்டு திமுக அளித்த போலி வாக்குறுதிகள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக பஸ் நிலையங்களுக்கு முன்பாக அதிமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இன்னொரு பக்கம் கடந்த 4 வருடங்களாக தங்களது அசுர பணபலத்தால் எப்படியும் அதிமுகவை கைப்பற்றி விடலாம் என்ற பகல் கனவுடன் குடைச்சல் கொடுத்து வந்த தினகரனுக்கும், அவருடைய சித்தி சசிகலாவுக்கும் ஓபிஎஸ் பலத்த அடி கொடுத்துள்ளார். இது சில ஆடிட்டர்களுக்கும், சூச்சூ சாமிகளுக்கும் சேர்ந்து விழுந்த அடிதான். எனவே இவர்கள் யாருமே இனி அதிமுகவிற்குள் மூக்கை நுழைக்க முடியாது” என்று கொந்தளிப்புடன் கூறினர்.

Views: - 164

0

0