இபிஎஸ்-க்கு பால் அபிஷேகம்.. விழாக்கோலம் பூண்ட அதிமுக தலைமை அலுவலகம்… மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கும் தொண்டர்கள்..!!

Author: Babu Lakshmanan
23 February 2023, 11:35 am
Quick Share

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு வெவ்வேறு அமர்வுகள் மாறுபட்ட தீர்ப்பு அளித்த நிலையில், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் மாறிமாறி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஜுலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர். இதன்மூலம், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது உறுதியானது. மேலும், ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கம் உள்பட நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசம் சென்றதால், அதிமுகவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது.

இதனிடையே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். அதிமுக தலைமை அலுவலகத்தின் முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். ஆட்டம், பாட்டத்துடன் காணப்படும் அவர்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.

Views: - 324

0

0