அமைச்சர் உதயநிதி விரைவில் ஜெயிலுக்கு போவார்… தேர்தல் நடப்பதற்குள் அது நடக்கும் ; அடித்துச் சொல்லும் இபிஎஸ் !!

Author: Babu Lakshmanan
5 April 2024, 1:51 pm

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் ஜெயிலுக்கு போவார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வனுக்கு ஆதரவாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார்.

மேலும் படிக்க: மகன், மகளுடன் ரயில் முன்பு பாய்ந்து பெண் தற்கொலை… சென்னையைச் சேர்ந்த குடும்பம் கோவையில் தற்கொலை ஏன்..?

அந்த வகையில், கோவை மாவட்டம் காரமடை பகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் பேசியதாவது :- திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது. போதைப் பொருட்களை விற்பனை செய்வதே திமு‌க நிர்வாகிகள்தான்.

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் முக்கிய நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்வர் மற்றும் அவரது மகன் ஆகியோருடன் அந்த நபர் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். போதைப் பொருள் கடத்தல் நபருடன் நெருக்கமாக உள்ள உதயநிதி விரைவில் சிறைக்கு செல்வார். அது தேர்தல் நடப்பதற்குள்ளேயே நடக்கும், எனக் கூறினார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?