பொறுத்திருந்து பாருங்க… திமுக கூட்டணியில் இருந்து வெளியேறப்போகும் கட்சி… இபிஎஸ் சொன்ன ரகசியம்!!

Author: Babu Lakshmanan
21 February 2024, 1:33 pm
Quick Share

திமுக ஆட்சி நீடித்தால் தமிழகத்தை ஆண்டவனாளும் காப்பாற்ற முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது :- திமுக ஆட்சியில் மதுரைக்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. இந்த திமுக அரசு அறிவித்த திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை என்றும் கனல் நீராகத்தான் திமுகவின் திட்டங்கள் உள்ளன.

நெல்பேட்டை, அவனியாபுரம் பாலம் அமைக்கும் திட்டம் கொண்டு வருவோம் என்று சொன்னார்கள். தற்போது, அந்தத் திட்டமும் கைவிடப்பட்டு விட்டதாக தெரிவிக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் தான் வைகை ஆற்று ஓரமாக தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்து வசதிக்காக சாலைகள் அமைக்கப்பட்டது. வைகை ஆற்றில் மேலும் இரண்டு தடுப்பணைகள் அமைக்கப்பட்டது.

பாலங்கள் அமைத்தது என பல திட்டங்களை அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள். அதேபோல், நத்தம் பறக்கும் சாலை திட்டத்தையும் கொண்டு வந்தது அதிமுக அரசு. எனவே மதுரைக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த அரசு அதிமுக அரசு. மேலும், விருதுநகரில் ஜவுளி பூங்கா திமுக கொண்டு வந்த திட்டம் என்று கூறுகிறார்கள். ஆனால், உண்மையாகவே அது அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம்.

தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது, பொறுத்திருந்து பாருங்கள். நிச்சயமாக கூட்டணி அமைக்கப்படும். திமுகவை எந்த கூட்டணி அமைத்திருக்கிறார்கள். கூட்டணியில் இருக்கிறேன் என்று சொல்கிறார்களே தவிர, இன்னும் முடிவு செய்யவில்லை. எனவே, பொறுத்திருந்து பாருங்கள், என்று தெரிவித்தார்.

அதிமுகவில் இருக்கும் முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு போகிறார்கள் என்ற கேள்விக்கு, பாஜகவில் இருந்து பலர் அதிமுகவிற்கு வந்திருக்கிறார்கள். அதை சொல்லுங்கள். இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், எனக் கூறினார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கேள்விக்கு, எங்கள் அதிமுகவின் கொள்கைப்படி எங்கள் கருத்தை சொல்லி இருக்கிறோம். நன்றாக படித்து பாருங்கள், எங்களுடைய கருத்தை தான் சொல்லியிருக்கிறோம் தவிர, வேறு ஒன்றும் சொல்லவில்லை. எங்கள் கருத்தை தான் கமிட்டிக்கு அனுப்பி இருக்கிறோம். எங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டால் ஆதரிப்போம்.

தேர்தல் கூட்டணி என்பது தேர்தல் அறிவித்த பின்பு தான் நடந்து இருக்கிறது. நான் முதலமைச்சராக இருக்கும்போது அப்படி தான் நடந்திருக்கிறது. தேர்தல் அறிவிப்பு நெருங்கும் போது தான் கூட்டணி அமைத்து இருக்கிறோம். இன்னும் தேர்தல் அறிவிக்க ஒரு மாதம் இருக்கிறது. எல்லா கட்சியும் கூட்டணி அமைக்கிறது. அதுபோல் அதிமுகவும் கூட்டணி அமைக்கும். 2019ல் 2021 தலைமையேற்று நடத்தினோம். இப்போது அதிமுக தலைமையேற்று நடத்தும், என்றார்.

அதிமுகவின் பிரதமர் வேட்பாளராக யாரை முடிவு செய்வீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, ஏன் ஓடிசாவில் பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமலே நடத்தவில்லையா..? தெலுங்கானாவில் அப்படி இருக்கிறதா..? ஆந்திராவில் அப்படி இருக்கிறதா..? மேற்கு வங்காளத்தில் அப்படி இருக்கிறதா..?

பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி தான் அந்த மாநிலத்தில் ஜெயிக்கவில்லை. 2014 ஜெயலலிதா பிரதமர் வேட்பாளர் முன்னிறுத்தி ஜெயிக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரைக்கும் தமிழ்நாடு மக்கள்தான் வாக்களித்து வெற்றி பெற செய்கிறார்கள். எங்களுக்கு யார் வாக்களிக்கிறார்களோ, அவர்கள்தான் எஜமானர்கள். அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதே நாங்கள் நிர்ணயிக்க வேண்டும்.

ஆனால் கூட்டணி என்று வந்தபோது கூட்டணி தர்மம் என்று வந்துவிடுகிறது. எனவே தேசிய அளவில் எடுக்கும் முடிவு சில நேரங்களில் பாதிக்கிறோம். எனவே, இந்த நிலை வரக்கூடாது என்பதற்காக அதிமுக சுயமாக முடிவெடுத்து செயல்படுவதற்கு தான் யாரிடமும் கூட்டணி இல்லை. எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க வேண்டும். அதுதான் எங்கள் நிலைபாடு, எனக் கூறினார்.

அதிமுகவின் முன்னாள் நிர்வாகி திரிஷாவை பற்றி பேசிய கருத்து குறித்து கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில், “அதற்குத்தான் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அவர் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. அவர் தீபா கட்சிக்கு போயிட்டு வந்தவர். ஏதோ இறக்கப்பட்டு சேர்த்தோம். அவரு உடல்நிலை மனநிலை சரியில்லாமல் இருந்தார். அவர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம்,” எனக் கூறினார்.

தேர்தல் கருத்துக்கணிப்பு திமுகவுக்கும், பாஜகவுக்கும் ஆதரவாக இருக்கிறது என்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலாவது :- தமிழக மக்கள் கருத்துக் கணிப்புக்கு ஓட்டு போடவில்லை. பொறுத்திருந்து பாருங்கள். போன முறையும் இது போல் தான் சொன்னீர்கள், என்ன ஆச்சு. 2021ல் 75 சீட்டு வந்துள்ளோம், கூட்டிப் பாருங்கள். ஏழு நாடாளுமன்றம் எங்களுக்கு வந்துள்ளது. அது போக ஈரோட்டில் 4,500 ஓட்டு தான் குறைவு சிதம்பரத்தில் 350 ஓட்டு தான் குறைவு, நாமக்கல்லில் 15,400 தான் குறைவு. இதெல்லாம் எப்போது என்றால் பத்தாண்டு காலம் நாங்கள் ஆட்சியில் இருந்தோம். அதன் பின்பு பல்வேறு விமர்சனங்கள் பின்னர் தான்.

மேலும், 540 அறிவிப்புகளில் திமுக தலைவர் அறிவித்தார். அந்த வளர்ச்சி அறிவிப்பை கண்டு மக்கள் ஏமாந்து போட்டு விட்டார்கள். ஆனால், இந்த மூன்று ஆண்டு காலத்தில் இந்த ஆட்சியின் மீது கடுமையான கோபத்தில் மக்கள் கொதிச்சு போய் இருக்கிறார்கள். விலைவாசி உயர்வு மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, கடைகளுக்கு வரி உயர்வு, எல்லா வகையிலும் சட்ட ஒழுங்கு மோசமான நிலையில் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் தேர்தலை சந்திக்கிறோம். எங்கள் கூட்டணி பிரம்மாண்டமான வெற்றியை பெரும், எனக் கூறினார்.

மேகதாது அணை குறித்து சிறப்பு தீர்மானம் எதிர்க்கட்சியாக இருக்கும் நீங்கள் ஏன் கொண்டு வரவில்லை என்ற கேள்விக்கு, அதிமுக ஆட்சியின் போது நீதிமன்ற அவதூறு வழக்கு போட்டோம். தில்லு திராணி இருந்தால் இந்த அரசு போட வேண்டும். மேகதாது அணை பிரச்சினை வந்தபோது, மேகதாது பற்றி குறிப்பிடவே கூடாது. இன்றைக்கு காவேரி மேலாண்மை ஆணையம் 28வது கூட்டத்தில் என்ன அதிகாரம் இருக்கிறதோ, அந்த அதிகாரத்துக்கு உட்பட்டு தான் இருக்க வேண்டும்.

மேகதாது என்ற சப்ஜெக்டே வரக்கூடாது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி என்ன என்றால் அங்கு இருந்து வரும் தண்ணீர் தேக்கி வைக்கின்ற தண்ணீர், வெளியேற்றும் தண்ணீர் என்பவரை இந்த ஆணையம் பகிர்ந்தளித்து, எந்தெந்த நேரத்தில் எவ்வளவு தண்ணீர் வெளியேற்ற வேண்டும் என்பதனை சொல்ல வேண்டும் என்பதுதான் அந்த ஆணையத்தின் பணியாகும். அதுக்கு மேலாக மேகதாது அணை பிரச்சனையை எடுத்தது என்பது கண்டிக்கத்தக்கது. இந்த அரசு கண்டித்து இருக்க வேண்டும்.

அதிமுக இருக்கும்போது கண்டித்தோம், இந்த பிரச்சினையை கொண்டு வரவே கூடாது, அதற்கு அதிகாரமே கிடையாது, நீதிமன்றம் வரை சென்று அவமதிப்பு வழக்கு போட்டோம். இந்த அரசு என்ன செய்தது ஓட்டெடுப்பில் கலந்து கொண்டது. ஐந்து ஓட்டு அவர்களுக்கு நான்கு ஓட்டு, நமக்கு இப்ப என்ன சென்ட்ரல் வாட்டர் கமிஷனுக்கு அனுப்பியாச்சு. துரோகம் செயலை செய்திருக்கிறது. இந்த அரசு அப்படியாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும். நீதிமன்றம் சென்று இருக்க வேண்டும் அல்லவா..?

அதிமுக அரசு இருந்தபோது, 50 ஆண்டுகால பிரச்சனை காவிரி பிரச்சனையை தீர்வு கண்டது மீட்டெடுத்தது, வேளாண் மண்டலத்தை தீர்க்கப்பட்டது. அதிமுக மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டது, திமுக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது தடுத்து நிறுத்தியது அதிமுக. அதேபோல், காவேரி குண்டாறு திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக. அது கிடப்பில் கிடைக்கிறது, கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை அதிமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டோம். ஆனால் திமுக ஆட்சியில் எந்த ஒரு நல்ல திட்டமும் வராது. இந்த ஆட்சி தொடர்ந்தால் ஆண்டவனாலையும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது, எனக் கூறினார்.

Views: - 242

0

0