அடுத்தடுத்த சம்பவம்… மூச்சு விடாத CM ஸ்டாலின்… அந்தப் பதவிக்கே லாய்க்கற்றவர் ; ஜெயக்குமார் கடும் விமர்சனம்..!!!

Author: Babu Lakshmanan
26 April 2024, 2:46 pm

வேங்கைவயல் சம்பவத்தை போல் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது உள்துறையை வைத்திருக்கும் ஸ்டாலின் தகுதி அற்றவர் என்பதை நிரூபிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பிரமுகர் இல்ல திருமணம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது :- தமிழகம் போதை பொருளின் ஹப்பாக (HUB) விளங்குகிறது.

மேலும் படிக்க: அடிக்கடி ஆடியோ வெளியிடும் அதிபுத்திசாலி IPS… இந்த சாதாரண சின்ன விஷயம் கூட தெரியாதா..? செல்லூர் ராஜு பாய்ச்சல்!

வேங்கை வயல் சம்பவம் நடைபெற்று பல மாதங்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததும், விஞ்ஞான வளர்ச்சி உள்ள நிலையில், இது போன்ற சம்பவங்களை ஆரம்பத்திலேயே ஒடுக்கி இருக்க வேண்டும். உள்துறை அமைச்சர் பதவியை வைத்துள்ள ஸ்டாலின் இதனை கண்டு கொள்ளாததும், இதன் தொடர்ச்சியை பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எனவே முதல்வர் உள்துறை அமைச்சர் பதவி வைத்திருப்பதற்கு லாய்க்கற்றவர் என்பது அனைவருக்கும் தெரியவந்துள்ளது, எனக் கூறினார். இந்த நிகழ்வின் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் திருமண வீட்டார் என பல உடனிருந்தனர்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!