எடப்பாடி பழனிசாமிக்கே அதிமுக? தேர்தல் ஆணையம் கொடுத்த அங்கீகாரம் : ஆதரவாளர்கள் குஷி!!

Author: Udayachandran RadhaKrishnan
21 December 2022, 2:40 pm

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் கோஷ்டிகள் யார் உண்மையான அதிமுக என முட்டி மோதுகின்றன. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்த அதிமுகவின் வரவு- செலவு கணக்கு விவரங்களை தேர்தல் ஆணையம் ஏற்காமல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வரவு செலவு கணக்கு விவரங்களை தேர்தல் ஆணையம் ஏற்று இணையத்தில் வெளியிட்டிருக்கிறது.

இபிஎஸ் கையழுத்திட்டம் வரவு செலவு அறிக்கைள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிமுக அங்கீகரித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!