கஜானாவை மட்டுமே நிரப்பும் திமுக… மக்களுக்கான ஒரே கட்சி அதிமுக மட்டுமே ; இபிஎஸ் பிரச்சாரம்…!!

Author: Babu Lakshmanan
8 April 2024, 7:01 pm
Quick Share

திமுகவினர் வாக்குசேகரிக்க வரும் போது நல்ல திட்டங்களை எல்லாம் ஏன் முடக்கினீர்கள் என கேள்வி எழுப்புங்கள்..? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளை ஆதரித்து அரண்மனை பகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- தமிழ்நாட்டில் அதிமுக, திமுகவுக்கு மட்டுமே போட்டி ; அதில் முதல் இடத்தில் இருப்பது அதிமுக தான். எம்ஜிஆர் மக்களுக்காக அதிமுகவை தொடங்கினார் ; குடும்பத்திற்காக கட்சியை நடத்தி வருகிறது திமுக, நாட்டு மக்கள் தான் அதிமுகவுக்கு எஜமானார்கள். எதில் எல்லாம் வருமானம் வருமோ அந்த திட்டங்களைக் கொண்டு வந்து தங்களின் கஜானாவை நிரப்பிக் கொள்கின்றனர் திமுகவினர்.

மேலும் படிக்க: அவதூறு குற்றச்சாட்டு..சிபிஎம் கட்சி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் : ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை!

விவசாயிகள், மீனவர்களுக்கான திட்டங்களை வாரி வழங்கியது அதிமுக தான். நானும் ஒரு விவசாயி. விவசாயிகள் கஷ்டங்கள், துன்பங்களை அனுபவ ரீதியாக உணர்ந்தவன் நான். அதிமுக திட்டங்களை மக்கள் யோசித்து பார்க்க வேண்டும். நல்ல திட்டங்களை எல்லாம் திமுக முடக்கியது. திமுகவினர் வாக்குசேகரிக்க வரும் போது நல்ல திட்டங்களை எல்லாம் ஏன் முடக்கினீர்கள் என கேள்வி எழுப்புங்கள்..?

காவிரி – குண்டாறு திட்டத்தை முடக்கியது ஏன்..? என்று திமுகவினரிடம் கேள்வி கேளுங்கள். காவிரி – குண்டாறு திட்டத்தை செயல்படுத்த ரூ.14,000 கோடியை விவசாயிகளுக்காக ஒதுக்கீடு செய்தேன். காவிரி – குண்டாறு திட்டத்தை முடக்கிய திமுகவுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். முல்லை பெரியாறு அணையில் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க சட்டப்போராட்டம் நடத்திய அதிமுக தான்.

திமுகவைச் சேர்ந்தவர்கள் சிறுபான்மை மக்களை ஆதரிப்பவர்கள் அல்ல, சந்தர்ப்பவாதிகள். கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த போது தமிழகத்தை ஆண்ட திமுக அதை கண்டுகொள்ளவில்லை. கச்சத்தீவை தாரைவார்த்தால் தமிழக மீனவர்களின் உரிமை பறிபோனது. நாடாளுமன்ற அனுமதி பெறாமல் கச்சத்தீவை தாரை வார்த்தது தவறு என்று உச்சநிதிமன்றத்தில் வழக்கு போட்டவர் ஜெயலலிததா தான்.

மேலும் படிக்க: காதலர்கள் கண்முன்னே சகோதரிகள் கூட்டு பலாத்காரம் ; தமிழகத்தை உலுக்கிய சம்பவம் ; தலைமறைவாக இருந்த ரவுடி கைது!!

மீனவ மக்களின் துன்பங்கள் அகலுவதற்கு கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுடன் இணைக்க வேண்டும். தேர்தலுக்காக கச்சத்தீவு பிரச்சனையை பாஜகவினர் எழுப்புகின்றனர். அப்போலோவுக்கு நிகரான மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையும், சட்டக்கல்லூரியையும் ராமநாதபுரத்திற்கு தந்ததே அதிமுக தான். 3 ஆண்டுகளில் ஏதேனும் ஒரு மருத்துவக் கல்லூரியை திமுக கொண்டு வந்ததா..?. இதுவரை எந்தக் கட்சியும் மீனவர்கள் சமுதாய மக்களை வேட்பாளர்களாக நிறுத்தாத நிலையில், 3 வேட்பாளர்களை அதிமுக நிறுத்தியுள்ளது, என தெரிவித்தார்.

Views: - 254

0

0