ரங்கராஜனா…? ராமலிங்கமா..? பிரச்சாரத்தின் போது குழம்பிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்..!!!

Author: Babu Lakshmanan
8 April 2024, 4:59 pm
Quick Share

இதுவரை எந்த பிரதமரும் செய்யாததை பிரதமர் மோடி செய்து காட்டியுள்ளதாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாகன பேரணியில் பங்கேற்றார்.

மேலும் படிக்க: முதியவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதறிய மக்கள்…!!

இதனை தொடர்ந்து, ராஜ்நாத் சிங் பேசியதாவது :- உலக நாடுகளில் மோடியால் நமக்கு பெருமை. காங்கிரஸ் 30 ஆண்டுகள் செய்ய முடியாததை பத்தாண்டுகளில் மோடி அரசு செய்துள்ளது. 2014 முன்பு நாட்டின் பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்தது. இப்பொழுது 2024 லில் மூன்றாவது இடத்தில் பொருளாதாரம் இருக்கும்
தற்போது 400 சீட் பெருவாரியாக பெற்று ஆட்சியைப் பிடிப்போம். திமுகவும், இங்கு காங்கிரஸ் திமுகவும் கூட்டணியாக இருக்கிறது. அதற்கு பெயர் இந்தியா கூட்டம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

அதற்கு நிகராக எங்கள் கூட்டணி வெற்றி பெற தேர்தலை சந்திக்க உள்ளது. பாரதிய ஜனதா கூட்டணி சொல்வதைத்தான் செய்யும். அதைத்தான் சொல்லும், வாக்கு தேர்தல் வாக்குறுதிகளில் சொல்வதை செய்வோம். அதன்படி, ராமர் கோவிலை கட்டி முடித்திருக்கிறோம். தேர்தலுக்கு முன்பாக தற்போது ராமர் ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: அவதூறு குற்றச்சாட்டு..சிபிஎம் கட்சி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் : ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை!

மெஜாரிட்டியாக ஜெயிக்கும் போது காஷ்மீர் ஆக்ட் 370 ரத்து செய்வோம் என்று கூறியிருந்தோம். அதன்படியே செய்திருக்கிறோம்.
எந்த மதத்திற்கும் நாங்கள் போக சொல்ல வில்லை. சிட்டிசன் திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறோம். எந்த மதத்திற்கும் தீமை செய்யக்கூடாது என்ற விதத்தில் எந்த மதத்திற்கு யாரோ போக வேண்டிய அவசியம் தேவையில்லை. முத்தலாக் திட்டம் மக்களுக்கும் தாய்மார்களுக்கும் நன்மையே உண்டாக்கும். நாடு சுதந்திரப் பெற்ற பிறகு எந்த ஒரு பிரதமர் தலைமையிலும் நாடு முன்னேறவில்லை. மோடி தலைமையில் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது.

உலக நாடுகள் அனைவரும் மோடியை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். வேற உயர்ந்த ஒரு தலைவருக்கு இது போன்ற மதிப்பு கொடுத்ததே இல்லை. எந்த உத்தரவாதம் கொடுத்தாலும், நாங்கள் அதை நிறைவேற்றி இருக்கிறோம். இனிவரும் காலங்களில் உத்தரவாதம் கொடுத்தால், அதை நிறைவேற்றுவோம். நாம் யாருக்கும் சலித்தவர்கள் இல்லை. பாதுகாப்பு அமைச்சராக நான் கூறுகிறேன், யாருக்கும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் இல்லை. உறுதியாக நமது ராணுவ தளவாடங்கள், ஏவுகணைகள், தளவாடங்கள் அனைத்தும் ஏற்றுமதி செய்து கொண்டுதான் இருந்தோம். தற்போது, இறக்குமதி செய்வதில்லை. நாமே தயாரித்து நமக்கு நாட்டுக்கு தேவையான பாதுகாப்ப படி நாமே தயாரித்திருக்கிறோம்.

தற்போது வரை தயாரித்த தடவாடங்களை ஏற்றுமதி செய்து கொண்டு உள்ளோம். ஸ்வச் பாரத் மூலம் ஏழைகளுக்கு கழிவறை மற்றும் தரமான வீடுகளை ஏழைகளுக்கு கட்டிக் கொண்டுள்ளோம். சிறுவியப்பாரிகளுக்கு நல்லது செய்து கொண்டு தான் இருக்கிறோம். 2047ல் நாம் மிகப்பெரிய சக்தியாகும். நாடாக உருவாகும் அதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். திமுகவும், காங்கிரசும் மக்களுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை. தற்போது வரை மோடி அரசு மக்களுக்கு இதுவரை உழைத்துக் கொண்டு இருக்கிறது. சூப்பர் பவராக இந்தியா மாறும் அதற்காக காத்துக் கொண்டிருங்கள், நமது வேட்பாளர் கே பி ராமலிங்கம் அவர்களை வெற்றி பெறச் செய்வோம்.

ராமலிங்கம் பாராளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றி நமக்கு தேவையான பணிகளை செய்து கொடுப்பார். ராமலிங்கத்தை வெற்றி பெற செய்யுங்கள், உங்களுக்கு நன்றி சொல்வதற்கு நானே இங்கு வருகிறேன், எனக் கூறினார்.

பிரச்சாரத்தின் போது, கேபி ராமலிங்கம் என்னும் அவரது பெயரை ரங்கராஜன் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். பின்னர், அருகில் இருந்தவர் தவறை சுட்டிக்காட்டிய பிறகு, மீண்டும் அவரது பெயரை சரியாக உச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 88

0

0