கைக்குழந்தையை தூக்கி வந்து அழுதப் பெண்… உடனடியாக போன் போட்ட எம்எல்ஏ விஜயபாஸ்கர் : நன்றி சொல்லிவிட்டு சென்ற தாய்…!!

Author: Babu Lakshmanan
4 December 2021, 5:07 pm
Quick Share

கரூர் : கைக்குழந்தையின் சிகிச்சைக்காக உதவி கேட்டு வந்த பெண்ணுக்கு, உடனடியாக அதிமுக எம்எல்ஏ உதவி செய்த நிகழ்வு பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியின் போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி. விஜயபாஸ்கர். கொரோனா சமயத்தில் இவர் ஆற்றிய பணிகள் மக்களிடையே நன்மதிப்பை பெற்றுக் கொடுத்தது. அதுமட்டுமில்லாமல், பல்வேறு இக்கட்டான காலங்களில் மெச்சும்படி பல்வேறு செயல்களை செய்து, மக்களிடையே நீங்கா இடம் பிடித்திருந்தார்.

vijayabaskar - updatenews360

இதையடுத்து, சட்டப்பேரவையில் அதிமுக தோல்வியடைந்திருந்தாலும், விராலிமலை தொகுதியில் போட்டியிட்ட சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, எம்எல்ஏவாக தனது தொகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில், சாலையில் காரில் விஜயபாஸ்கர் சென்று கொண்டிருந்த போது, மாத்தூரை சேர்ந்த சத்தியபிரியா என்பவர் கையில் குழந்தையுடன் வந்து காரை மறித்து பேசினார். அப்போது, தனது குழந்தை அக்‌ஷனாவிற்கு வாய் பகுதியில் சதை வளர்ச்சிக்கு சிகிச்சைக்கு உதவுமாறு கண்ணீர் மல்க அவர் கோரிக்கை விடுத்தார்.

இதனைக் கேட்ட சி.விஜயபாஸ்கர், உடனடியாக திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரிய சிகிச்சை அளிக்க உதவி செய்யுமாறு அறிவுறுத்தினார். பின்னர், தான் கைப்பட எழுதிய பரிந்துரை கடிதத்தை அந்தப் பெண்ணுக்கு வழங்கியதுடன், மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவிம் வழங்கினார்.

அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கரின் இந்த செயல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 277

0

0