நகர்ப்புற தேர்தல் வெற்றியை தொடர்ந்து அண்ணாமலையின் அடுத்த அதிரடி: பாஜகவை பலப்படுத்த புது வியூகம்..!!

Author: Rajesh
5 March 2022, 5:12 pm

சென்னை: தமிழகத்தில் நிர்வாக ரீதியிலான 8 மாவட்டங்களில் பாஜக அணிகள், பிரிவுகள் அனைத்தும் கலைக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக, மாநகராட்சிகளில் 22 இடங்களிலும், நகராட்சியில் 56 இடங்களிலும், பேரூராட்சியில் 230 இடங்களிலும் என மொத்தமாக 308 இடங்களில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பாஜக தான் 3வது பெரிய கட்சி என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார் இந்நிலையில், சீரமைப்பு நடவடிக்கையாக, சென்னை உள்பட 7 மாவட்டங்களில் பாஜக அணிகள், பிரிவுகள் அனைத்தும் கலைக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Image

அதன்படி, நெல்லை, நாகை, சென்னை மேற்கு, வட சென்னை மேற்கு, கோவை நகர் மாவட்டங்களிலும், புதுக்கோட்டை, ஈரோடு வடக்கு, திருவண்ணாமலை வடக்கு மாவட்டங்களிலும் பாஜக அணிகள் கலைக்கப்பட்டுள்ளது. இந்த 8 மாவட்டங்களிலும் தலைவர், நிர்வாகிகள், அணிகள், பிரிவுகள், மண்டல் கமிட்டிகள் என அனைத்தும் கலைக்கப்படுகிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி மாவட்டங்களில் கீழ்கண்ட மாவட்டங்களை சீரமைக்கும் பொருட்டு திருநெல்வேலி, நாகை, சென்னை மேற்கு, வட சென்னை மேற்கு, கோயம்புத்தூர் நகர், புதுக்கோட்டை, ஈரோடு வடக்கு, திருவண்ணாமலை வடக்கு உள்ளிட்ட மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், அணிகள், பிரிவுகள் மற்றும் மண்டல கமிட்டிகள் அனைத்தும் முழுமையாக கலைக்கப்படுகிறது.

புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரை, தற்காலிகமாக கீழ்கண்ட நிர்வாகிகள் மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். புதிய மாவட்ட பொறுப்பாளர்களாக,

திருநெல்வேலி – ஜோதி
நாகை – வரதராஜன்
சென்னை மேற்கு – பாலாஜி
வட சென்னை மேற்கு – மனோகரன்
கோயம்புத்தூர் நகர் – முருகானந்தம்
புதுக்கோட்டை – செல்வ அழகப்பன்
ஈரோடு வடக்கு – செந்தில்குமார்
திருவண்ணாமலை வடக்கு – ஏழுமலை

என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு எதிர்பார்த்ததை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து, எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் கூடுதல் வெற்றி பெறுவதற்கு தேவையான பணிகளை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை முனைப்புடன் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே இந்த நிர்வாக ரீதியிலான மாற்றம் பார்க்கப்படுகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!