ஓவராக ஆட்டம் போடும் திமுக… அதிகாரத்தை ஆளுநர் கையில் எடுக்க வேண்டும் ; கொளுத்திப் போடும் அர்ஜுன் சம்பத்..!!

Author: Babu Lakshmanan
4 July 2023, 3:32 pm
Quick Share

திருச்சி ; அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது நீதிபதிகளின் தீர்ப்பு வியப்பளிக்கிறது என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள பெரியார் சிலை அகற்றும் பிரச்சனை தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் ஆஜராக இன்று காலை திருச்சி நீதிமன்றத்திற்கு வருகை தந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் நீதிமன்றத்தில் ஆஜராகினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது ;- செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார். நீதிபதிகளின் தீர்ப்பு வியப்பளிக்கிறது. நான் கேட்கிறேன், இதுவே ஒரு சாதாரண பிரஜை இதுபோன்ற ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார், இதுபோன்று நிகழ்வு நடக்குமா?.

இதுவே சாதாரண நபர்கள் இதுபோன்ற ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தால் அபராதம் போட்டு துரத்தி விட்டு இருப்பார்கள். ஒரு நீதிபதி அமலாக்கத்துறை செய்தது சரி என்கிறார், மற்றொரு நீதிபதி அமலாக்கத்துறை செய்தது தவறு என்று கூறுகிறார். இந்நிலையில், தலைமை நீதிபதியிடம் இந்த வழக்கு சென்றிருக்கிறது. நீதித்துறையில் அர்பன் நக்சல்களின் ஊடுருவல் உள்ளது. பல கிறிஸ்தவர்கள் உள்ளே ஊடுருவி சனாதனத்திற்கு இந்துத்துவாவிற்கு எதிராக பல நேரங்களில் செயல்படுகிறார்கள். இது போன்ற காரியங்களால் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படுகிறது. சாமானிய மக்களாகிய நாங்கள் பாதிக்கப்படுகிறோம்.

இதனால், நாங்கள் சொல்ல வருவது என்னவென்றால், நீதித்துறையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும். மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் நீதித்துறையில் கண்டிப்பாக சீர்திருத்தத்தை கொண்டு வருவார். நீதிநிலை நாட்டப்பட வேண்டும் என்றால் நீதித்துறையில் சீர்திருத்தம் அவசியம்.

பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கு எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. அதற்கான கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. பொது சிவில் சட்டம் அமல்படுத்தினால் பல்வேறு பிரச்சனைகள் வரும் என்று வேண்டுமென்றே பலர் பொய் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதனை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். அம்பேத்கர் இதனை தெளிவாக கூறியுள்ளார்.

தமிழகத்தில் கல் குவாரிகள் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர். பேச்சுவார்த்த நடத்தி முடிவுக்கு வராததால் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. கனிமவள ஸ்டிரைக் முறை முடிவுக்கு வரவேண்டும். அதனை முறைப்படுத்த வேண்டும். ஆளுநர் தனது கடமையை சிறப்பாக செய்து வருகிறார். ஆனால், இந்த திராவிட மாடல் அரசாங்கம் ஆளுநருக்கு எதிராக திட்டமிட்டு, அவதூறு பரப்பிக் கொண்டிருக்கிறது. ஆளுநர் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்.

மாரி செல்வராஜ், ரஞ்சித் ஆகியோர் திமுகவின் பிரச்சார சாதனத்தை பயன்படுத்தி, திமுகவில் பட்டியல் இன மக்கள் எப்படி நடத்தப்படுகிறார். மாமன்னன் யாரு என்பதையே கூறி இருக்கிறார். மாமன்னன் பழைய சபாநாயகர் தனபால்தான். நடிகர் ஜோசப், விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். விஜய், அஜித் ஆகியோர் அரசியலுக்கு வர வேண்டும்.

2024 தேர்தல் மற்றும் 2026க்கான ஒரு மாற்றத்திற்கான தேர்தல் ஆகும். ஒரே நாடு, ஒரே தேர்தல் வர வேண்டும், அது எங்களது கோரிக்கை, என தெரிவித்தார்.

Views: - 300

0

0