செந்தில் பாலாஜிக்கு சிக்கல்… உச்சநீதிமன்றம் கொடுத்த க்ரீன் சிக்னல் : தயாராகும் அமலாக்கத்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
4 July 2023, 2:35 pm
SC Signal - Updatenews360
Quick Share

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுக்கு எதிராகவும், தங்களது காவலில் விசாரணைக்கு எடுக்க அனுமதிக்கக்கோரியும் அமலக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த், திபான்கர் தத்தா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமலக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, இன்று சென்னை உயர்நீதிமன்றம் ஆட்கொணர்வு மனு மீது இரு வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. ஆனால் எனது கோரிக்கை என்பது இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும். ஏனெனில் தாமதமாகும். ஒவ்வொரு நாளும் ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

எனவே இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்தக்கூடாது, காலம் தாழ்த்தும் ஒவ்வொரு மணித்துளியும் வழக்கை நீர்த்துபோக செய்யும் என கூறினார். மேலும் ரிமாண்ட் செய்யப்பட்ட பின்னர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வது சட்டப்பூர்வமானது அல்ல, எனவே இந்ந ஆட்கொணர்வு மனு விவகாரத்தில் எழும் சட்ட கேள்விகளுக்கு உச்சநீதிமன்றறமே விடை காண வேண்டும் என அமலாக்கத்துறை வழக்கறிஞர் கோரினார்.

அப்போது செந்தில் பாலாஜி மனைவி தரப்பு கபில் சிபல் குறுக்கிட்டு வாதாடுகையில், உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி முடிவுக்காக வழக்கு அனுப்பப்படும்போது, எவ்வாறு உயர்நீதிமன்ற நடவடிக்கையை புறந்தள்ளிவிட்டு உச்சநீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என கோர முடியும் என கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து செந்தில்பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி வாதிடுகையில், ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்றம் முடிவெடுக்கட்டும் என உச்சநீதிமன்றம் கடந்த முறை கூறியுள்ளது, எனவே தற்போதைய நிலையில் மூன்றாவது நீதிபதி முடிவுக்கு காத்திருப்பதில் என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக உத்தரவிட்ட நீதிபதிகள் சூர்யகாந்த், திபான்கர் தத்தா அடங்கிய அமர்வு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வெகு விரைவில் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கை விசாரணைக்கு அனுப்ப வேண்டும். மேலும் வழக்கை விரைந்து மெரிட் அடிப்படையில் விசாரித்து முடிக்கவும், ஒரு வாரத்திற்குள் அமர்வு அமைக்க அறிவுறுத்தி அமலாக்கத்துறை மேல்முறையீட்டு வழக்கை ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தொடர்ந்து குறுக்கிட்ட அமலக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, செந்தில் பாலாஜி யார் காவலில் இருக்க வேண்டும் நீதிபதிகள் என கூற வேண்டும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு நீதிபதிகள், நீதிமன்றம் ஜாமின் வழங்காத நிலையில் அவர் நீதிமன்ற காவலில் தான் இருப்பார் என தெரிவித்தார். அப்படியென்றால் அமலக்கத்துறை காவல் கோரி தனி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வோம் என தெரிவித்தனர். இதற்கு நீதிபதிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

Views: - 275

0

0