வழிபாட்டு நெறிமுறைகளில் அரசியல் தலையீடு… பாரம்பரிய முறைகளை சீரழிக்கும் திமுக அரசு… பாஜக கண்டனம்

Author: Babu Lakshmanan
11 July 2022, 5:06 pm
Quick Share

தமிழகத்தில் வழிபாட்டு நெறிமுறைகளில் அரசியல் செய்யும் திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேலூ மாவட்டம் அரப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழக பா.ஜ.க.வின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் திமுக அரசைக் கண்டிப்பது உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு :-

 1. இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் பிரதமர் மோடியின் சாதனைகளுக்கு பாராட்டு
 2. ரஷ்யா தாக்குதலின் போது, உக்ரைனில் சிக்கி தவித்த தமிழக மாணவர்களை மீட்டெடுத்து பாதுகாப்பாக கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு பாராட்டும், நன்றியும்
 3. அக்னிபாத் திட்டத்திற்கு பாராட்டு
 4. இலங்கை தமிழர்களின் இன்னல்களை நீக்கவும், நெருக்கடியான காலகட்டத்தில் அங்கு பயணம் மேற்கொண்ட தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலைக்கு பாராட்டு
 5. தமிழகத்தை போதை பொருட்களின் மையமாக மாறியுள்ள ஸ்டாலின் அரசின் செயல்பாட்டை கண்டித்தல்
 6. மத்திய அரசின் தொழில்வளர்ச்சி திட்டங்களுக்கு, தமிழகத்தில் தடை கல்லாக இருக்கும், தொழில் வளர்ச்சியில் ஆமை வேக திமுக அரசின் ஒத்துழையாமைக்கு கண்டனம்
 7. ஊரக / நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகங்களில் பாஜ பிரதிநிதிகளையும், திமுக அல்லாதவர்களையும் செயல்பட விடாமல் தடுக்கும் ஸ்டாலின் அரசிற்கு கண்டனம்
 8. இந்தியாவின் ஜனாதிபதி வேட்பாளராக பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்முவை தேர்ந்தெடுத்தமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றியும் பாராட்டும்
 9. தமிழகத்தில் வழிபாட்டு நெறிமுறைகளில் அரசியல் தலையீடு செய்து பாரம்பரிய முறைகளை சீரழிக்கும் இந்து மத விரோத ஸ்டாலின் அரசிற்கு கண்டனம்
 10. மத்திய அரசு திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி, போலி விளம்பரம் தேடும் ஸ்டாலின் அரசை கண்டித்தல்
 11. தமிழகத்தில் ஸ்டாலின் தேச விரோத நடவடிக்கைகளை கண்டித்து இந்தியாவின் இறையாண்மையை காப்போம்
 12. இளையராஜாவிற்கு ராஜ்யசபா நியமன எம்.பி., வழங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி
 13. தமிழகத்தில் ஸ்டாலின் அரசின் நிர்வாகத்தால் மாநிலத்தின் கல்வித்தரம் குறைந்துள்ளதை கண்டித்து
 14. நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக மத்திய அரசிற்கு கோரிக்கை ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Views: - 379

0

0