அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் பண்ணுங்க ; ஆளுநர் மூலமாக காய் நகர்த்தும் பாஜக… திமுகவுக்கு புது தலைவலி..!!

Author: Babu Lakshmanan
10 September 2022, 4:41 pm
annamalai - senthil balaji - updatenews360
Quick Share

அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்என் ரவிக்கு தமிழக பாஜக தலைவர்கள் அழுத்தம் கொடுத்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் புதிய மின்கட்டண உயர்வை தமிழக அரசு இன்று அமலுக்கு வந்துள்ளது. இதற்கு அமமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பில், அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது :- தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்த்தப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு கருப்பு நாளாகும். மக்கள் போராட்டம் நடத்தினாலும், மின் கட்டணத்தை உயர்த்துவேன் என்று “தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்” தமிழக அரசு, அமைச்சரும் செயல்பட்டு வருகின்றனர்.

தமிழக அரசு என்ன செய்தாலும் மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரை வேறு வழியில்லை. மின் கட்டண உயர்வு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். ஏற்கனவே கூறியது போல் சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக டிஎன்இபி-யை நடத்தி வருகிறார்கள். இதற்கான பதிலடி மக்களால் நாடாளுமன்றத் தேர்தலில் கொடுக்கப்படும்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட பண மோசடி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த தீர்ப்பில், மாநில அரசுக்கும், அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக அரசுப் பணியில் உள்ள அமைச்சர் தான் பணம் வாங்கியதாக ஒப்புக் கொண்டுள்ளார். அதேபோல் பணம் கொடுத்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர். பணம் வாங்கிக் கொடுத்ததாக இடைத்தரகரும் ஒப்புக் கொண்டுள்ளார். இதைக் கடந்து என்ன ஆதாரம் தேவை.

அதனால் இந்த தீர்ப்பின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதனால் தான் ஆளுநருக்கு அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி உள்ளோம். அதேபோல் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் பாஜகவையும் ஒரு தரப்பாக இணைக்க மனுதாக்கல் செய்யப்படும், என்று தெரிவித்தார்.

Views: - 160

0

0