பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தும் பாஜக நிர்வாகி கொலை : செயலிழந்து உள்ளதா காவல்துறை? அண்ணாமலை வெளியிட்ட பதிவால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 May 2022, 10:59 pm
Annamala Condemned -Updatenews360
Quick Share

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாஜக மத்திய சென்னை மாவட்ட எஸ்சி அணித்தலைவர் பாலச்சந்தர். இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அவருக்கு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று இரவு நேரத்தில் சிந்தாதிரிப்பேட்டையில் வைத்து பாலச்சந்தர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் 6 பேர் கொண்ட கும்பல் பாலச்சந்தரை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக நிர்வாகி கொலைக்கு அண்ணாமலை கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். திமுக அரசால் தமிழகத்தில் யாரும் பாதுகாப்பு இல்லை என கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இங்கே எவருக்கும் பாதுகாப்பு இல்லை! திமுக அரசால் செயல் இழந்து நிற்கும் காவல்துறையால் சாமானிய மக்களுக்கு எந்தவித நன்மையும் விளையாத சூழல். மத்திய சென்னை மாவட்ட பட்டியல் இன அணித் தலைவர் சகோதரர் பாலசந்தர் அவர்களின் குடும்பத்தாருக்குப் @BJP4TamilNadu கட்சி அரணாக இருக்கும்.

இளமையும், துடிப்பும் மிக்க எங்கள் சகோதரனைக் கொலை செய்தவர்கள் யார் என்பதை காவல்துறை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Views: - 368

0

0