FIRST PLAYOFFS, FIRST WIN, FIRST FINAL.. கில்லராக மாறிய மில்லர் : ராஜஸ்தானை வீழ்த்தி IPL 2022 இறுதிப்போட்டிக்கு நுழைந்தது குஜராத்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 May 2022, 11:36 pm
GT - Updatenews360
Quick Share

ஐபிஎல் தொடரின் முதல் ப்ளே ஆஃப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன் படி பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஓப்பனிங் வீரர் யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 3 ரன்களுக்கு அவுட்டாகி நடையை கட்டினார்.

ஜாஸ் பட்லரும் கடந்த சில போட்டிகளில் சிறப்பாக இல்லாததால், அந்த அணியை யார் காப்பாற்றுவது என்ற சிக்கல் உருவானது. ஆனால் அப்போது தான் தனது கேப்டன் இன்னிங்ஸ் மூலம் கம்பேக் கொடுத்தார் சஞ்சு சாம்சன்.

இருவரும் நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஒரு பக்கம் பட்லர் பொறுமையாக ஆட, மறுமுனையில் இருந்த சஞ்சு அதிரடியாக விளாசினார்.

இறுதியில் சாய் கிஷோர் வீசிய பந்தில் சிக்கினார். மொத்தமாக 26 பந்துகளை சந்தித்த சஞ்சு சாம்சன் 47 ரன்களை குவித்தார். மிகவேகமாக ரன்கள் உயர்ந்துவிட்டது. மேலும் ஐபிஎல் 2022ல் 400 ரன்களையும் கடந்தார்.

பின்னர் படிக்கல் தன் பங்குக்கு 28 ரன்கள் எடுத்து அவுட் ஆக, பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். நிலைத்து நின்று ஆடிய பட்லர் கடைசியில் அதிரடி காட்டினார்.

20வது ஓவரில் 2 ரன் அவுட்களை குஜராத் எடுத்ததால், 6 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் 188 ரன்க எடுத்தது. 189 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி வீரர் சாஹா டக்அவுட் ஆகி அதிர்ச்சி தந்தார்.

ஆனால் கில் மற்றும் வேடு ஆகியோர் சரவெடியாக விளையாடினர். ஆனால் இது நிலைக்கவில்லை. அதிரடியாக விளையாடிய கில் 35 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆக, வேடும் அவுட் ஆனார்.

பின்னர் வந்த பாண்டியாவும், மில்லரும் நிலைத்து நின்று ஆடினர். ஒரு பக்கம் மில்லர் பொறுமையாக விளையாடினார். ஆனால் மறுமுனையில் மின்னல் வேகத்தில் ஹர்திக் பாண்டியா விளாசினார். 16 ஓவரில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்தடுத்து ஓவரில் பொறுமையாக விளையாடிய குஜராத் அணி கடைசி ஓவரில் 16 ரன் தேவை என்ற நிலையில், பிரஷித் கிருஷ்ணா வீசிய முதல் 3 பந்துகளில் அடுத்தடுத்து சிக்ஸருக்கு விளாசினார் மில்லர். இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் அறிமுகமான முதல் தொடரில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து குஜராத் அணி சாதித்துள்ளது.

Views: - 1928

0

0