‘வழக்கு போட்டால் பயந்துடுவோமா…?’ முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டே ஆகனும் : அழுத்தம் கொடுக்கும் அண்ணாமலை !!

Author: Babu Lakshmanan
22 February 2023, 2:15 pm
Annamalai Stalin - Updatenews360
Quick Share

வழக்குப்பதிவு செய்தால் அஞ்சி விட மாட்டோம் என்று தமிழக அரசின் நடவடிக்கை குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு என்பவர் திமுக கவுன்சிலரால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று தமிழக பாஜகவின் முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடைபெற்றது. இதில், மாநில தலைவர் அண்ணாமலை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டானர்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட 3,500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து அண்ணாமலை பேசுகையில், “வழக்குப்பதிவு செய்ததால் யாரும் பயந்து விட மாட்டோம். இது என்மீது பதியப்பட்ட 84வது வழக்கு. ராணுவ வீரரை திமுக கவுன்சிலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட குறித்து சம்பந்தப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்திடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். இல்லையெனில், வரும் நாட்களில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்,” என தெரிவித்துள்ளார்.

Views: - 253

0

0