வெறும் 3 பேருடன் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி ; வீடியோவை பகிர்ந்து கிண்டல் செய்த அண்ணாமலை..!!

Author: Babu Lakshmanan
23 March 2023, 7:05 pm
Quick Share

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கிண்டலாக கருத்து பதிவிட்டுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என விமர்சித்தார். அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாக பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.

RAhul - Updatenews360

மோடி பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசிய வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததுடன், 30 நாட்களுக்கு ஜாமீன் வழங்கியும் நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர். அந்த வகையில், தமிழகத்திலும் போராட்டம் நடத்தப்பட்டது. இதன்ஒரு பகுதியாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, தனது 3 ஆதரவாளர்களுடன், கும்பகோணத்தில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கிண்டலாக கருத்து பதிவிட்டுள்ளார். அதாவது, “ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தும் காங்கிரஸ் கட்சியினரை விட செய்தி சேகரிக்க செய்தியாளர்களின் எண்ணிக்கை அதிகம்,” எனக் கூறி கிண்டலடித்துள்ளார்.

Views: - 146

0

0