‘முரசொலி பேரு-ல ரூ.80 லட்சம் வரைக்கும் பில்’… திமுக எம்பி ஆ.ராசாவின் புதிய ஆடியோவை வெளியிட்ட அண்ணாமலை

Author: Babu Lakshmanan
27 January 2024, 6:26 pm

2ஜி வழக்கு தொடர்பாக தமிழகத்தின் உளவுத்துறை அதிகாரியாக இருந்த ஜாபர் சேட்டுடன் திமுக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சரமான ஆ.ராசா பேசியதாகக் கூறப்படும் ஆடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

தமிகத்தை ஆளும் திமுக அரசு மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து கூறிக் கொண்டே வருகிறார். இந்த சூழலில் ஏற்கனவே திமுக பைல்ஸ் என்று திமுக ஊழல் பட்டியலை இரு கட்டங்களாக வெளியிட்டிருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Annamalai - Updatenews360

இதையடுத்து, கடந்த பொங்கலன்று முன்னாள் உளவுத்துறை ஐஜி ஜாபர்சேட்டுடன் திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, ஆ.ராசா மற்றும் முன்னாள் தலைமை செயலர் சண்முகநாதன் உள்பட பலரின் ஆடியோக்களின் எனக் கூறி, அண்ணாமலை அடுத்தடுத்து வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார் அண்ணாமலை . அந்த உரையாடலில் 2ஜி விசாரணையில் சி.பி.ஐ. ரெய்டுகளின் நேரத்தை தி.மு.க. காங்கிரஸ் முடிவு செய்து விசாரணையை நீர்த்து போக செய்யும் வகையில் செயல்பட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.

2ஜி வழக்கு விசாரணை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எப்படி நடைபெற்றது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றும், திமுக பைல்ஸ் தொகுப்பு முடிவடையாது தொடரும் எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், 2ஜி வழக்கு தொடர்பாக தமிழகத்தின் உளவுத்துறை அதிகாரியாக இருந்த ஜாபர் சேட்டுடன் திமுக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சரமான ஆ.ராசா பேசியதாகக் கூறப்படும் மற்றொரு ஆடியோவை அண்ணாமலை தற்போது வெளியிட்டுள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!