ETL நிறுவனத்தில் ரூ.3000 கோடி… போக்குவரத்துத் துறையில் ரூ.2,000 கோடி.. அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டு.. DMK FILES பாகம் 2-ஐ வெளியிட்ட அண்ணாமலை…!!!

Author: Babu Lakshmanan
26 July 2023, 6:11 pm

திமுக ஊழல் தொடர்பான ஆதாரங்கள் என்று கூறி DMK FILES PART 2 வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தபடியே, மிகப்பெரிய இரும்புப் பெட்டியில் ரூ. 5, 600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களை ஆளுநர் ஆர்என் ரவியிடம் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- மூத்த தலைவர்களுடன், நமது மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆர்என் ரவி அவர்களைச் சந்தித்தோம். ஆளுநரிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், ரூ.5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம், எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, திமுக ஃபைல்ஸ் 2-வின் வீடியோவை அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அதில், இடிஎல் கட்டுமான சேவைகள் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் ரூ.3000 கோடி ஊழல். போக்குவரத்துத் துறையில் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் .

தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகமான டி.என்.எம்.எஸ்.சி நிறுவனத்தில் ரூ.600 கோடிக்கு மேல் ஊழல். ஊழல் தொடர்பான தகவல்கள் பாதயாத்திரையின் போது மக்களுக்கு விளக்கி கூறப்படும். திமுக அரசு இந்த ஊழல் குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Seenu Ramasamy divorce reasons இளம் நடிகைகளுக்கு குறி…இயக்குனர் “சீனு ராமசாமி” விவாகரத்தின் பின்னணி… பகிரங்கமாக பேசிய பயில்வான்..!
  • Views: - 451

    0

    0