DMK FILES PART-2வில் ரூ.5,600 கோடி… இரும்புப் பெட்டியோடு ஆளுநர் மாளிகைக்கு சென்ற அண்ணாமலை… கலக்கத்தில் திமுக முக்கியப் புள்ளிகள்..!!

Author: Babu Lakshmanan
26 July 2023, 4:49 pm

DMK FILES PART-2 எனப்படும் திமுக முக்கிய புள்ளிகளின் சொத்து விபரங்கள் மற்றும் ஊழல் குறித்த ஆவணங்களை ஆளுநரிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒப்படைத்தார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியை மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலான பாஜகவினர் கடுமையாக விமர்சித்தும், எதிர்த்தும் வருகின்றனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பொங்கல் பரிசு தொகுப்பு ஊழல் மற்றும் தமிழக மின்வாரியத்தில் முறைகேடாக கோபாலபுரத்திற்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டர் வழங்கப்படுவதாக பாஜக சார்பில் அடுத்தடுத்து புகார்கள் அளிக்கப்பட்டு வந்தது.

தொடர்ந்து, கடந்த ஏப்., 14ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எ.வ.வேலு, எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி உள்ளிட்ட பலரது சொத்து விபரங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.

அண்ணாமலையின் இந்த சொத்துப்பட்டியலை தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பரிவர்த்தணை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதுடன், அவரது சொத்துக்களையும் முடக்கியுள்ளது. இது திமுக நிர்வாகிகளின் வயிற்றில் புளியை கரையச் செய்துள்ளது.

இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தபடியே, மிகப்பெரிய இரும்புப் பெட்டியில் ரூ. 5, 600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களை ஆளுநர் ஆர்என் ரவியிடம் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- மூத்த தலைவர்களுடன், நமது மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆர்என் ரவி அவர்களைச் சந்தித்தோம். ஆளுநரிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், ரூ.5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம், எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, திமுக அமைச்சர்கள் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படும் சூழலில், தற்போது அண்ணாமலையின் இந்த நடவடிக்கை திமுகவினரை ஆட்டம் காணச் செய்துள்ளது.

  • Sivakarthikeyan Surya Connection 10 வருடம் கழித்து பாருங்க….சூர்யாவிடம் சவால் விட்ட சிவகார்த்திகேயன்..!
  • Views: - 453

    0

    0