இது அமலாக்கத்துறை தவறு அல்ல… மெச்சூரிட்டி இல்லாத அரசியல் தலைவர்கள் ; ED அதிகாரி கைது பற்றி அண்ணாமலை கொடுத்த விளக்கம்!!

Author: Babu Lakshmanan
2 December 2023, 9:44 am
Quick Share

லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் கொடுத்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- அமலாக்கத்துறையில் இது போன்ற நடவடிக்கையில் பலர் கைதாகி இருக்கிறார்கள் ஏற்கனவே ராஜஸ்தானில் ஒருவர் கைதாகி இருக்கிறார். ஒரு மனிதன் தவறு செய்ததற்காக அமலாக்கத்துறை மோசம் என கூற முடியாது. தமிழக காவல்துறையில் ஒருவர் தவறு செய்தால் தமிழக காவல்துறையும் மோசம் என யாரும் சொல்லிவிட முடியாது. அமலாக்கத்துறையில் யார் தவறு செய்திருக்கிறார் என பார்த்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக காவல்துறை இதை நேர்மையாக அணுக வேண்டும்.

இதுபோன்று லஞ்சம் வாங்கியவர்களை தேர்ந்தெடுத்து பிடிப்பதற்கு லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு முழு அதிகாரம் இருக்கிறது. இதை அரசியலாக பார்ப்பதை விட ஒரு நபர் லஞ்சம் வாங்க முற்பட்டு வாங்கி இருக்கிறார் என்றால் நேர்மையாக அணுக வேண்டும் என்பது எனது கருத்து. மொத்த சிபிஐ தமிழக காவல்துறை என அனைவரும் தலையிட வேண்டியது இல்லை. தமிழக அரசியல்வாதிகளிடம் மெச்சூரிட்டி குறைவாக இருக்கிறது. மெச்சூரிட்டி குறைவான அரசியல்வாதிகளை வைத்து தமிழகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. 2024, 26ல் பாஜக உயர்வு பெறும்.

சென்னை மழையை பொறுத்தவரையில் இது புதிது கிடையாது. கருணாநிதி காலத்தில் இருந்து தற்போது வரை வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு நடந்து செல்கிறார்கள். தற்போது ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் பேண்டை தூக்கிக்கொண்டு நடந்து செல்கிறார். அடுத்து அவருடைய மகன் நடந்து போவார் அவர்கள் சென்னையை பார்க்கக்கூடிய கோணமே வித்தியாசமாக இருக்கிறது.

அவர்கள் ஏதோ ஒரு பணியை செய்யலாம் நான்காயிரம் கோடி அளவிற்கு பணி செய்திருக்கிறோம் என கூறி இருக்கிறார்கள். ஆனால், திரும்பி பார்த்தால் சாதாரண மழைக்கு கூட சென்னை தாங்குவதில்லை. இதை பெரிய மழையாக பார்க்க வேண்டியதில்லை. சாதாரண மழை சாலையில் உள்ள கழிவுநீர் அனைத்துமே வீட்டிற்குள் வந்து விடுகிறது. வீட்டில் உள்ள எந்த பொருட்களையும் பயன்படுத்த முடியாத நிலைமை தான் இருக்கிறது.

தமிழகத்தை இதுவரை ஆண்ட கட்சிகளுக்கு நிரந்தர தீர்வு காண எந்த யூகமும் கிடையாது. இதை மாற்ற வேண்டும், சென்னை திமுகவின் கோட்டை என்பார்கள். சென்னை மக்களுக்கு திமுக பெரும் துயரத்தை மட்டுமே ஒவ்வொரு மழைக்காலத்திலும் கொடுத்திருக்கிறது. சென்னை மக்கள் கடந்த இரண்டு ஆண்டு காலத்திலும் கூட எந்த தீர்வும் கிடைக்காது.

உலகத் திறமை வாய்ந்த அதிகாரிகளை கொண்டு இதை கையாள வேண்டும். உத்தரகாண்டில் டனலில் இருந்தவர்களை மீட்பதற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து கை தேர்ந்தவர்கள் கொண்டுவரப்பட்டிருந்தது. எல்லா முறையும் முயற்சி எடுக்கப்பட்டது. கடைசியாக எலி வளை பணியாளர்களை வைத்து உடைத்து உள்ளே சென்றார்கள். இவர்கள் இன்னும் குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். சென்னையில் நாங்கள் தான் ஆளுமை எங்களால் தான் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என கூறிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, மக்கள் மாற்றி யோசிக்க வேண்டும்.

தெலுங்கானாவைப் பொறுத்தவரையில் தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி வந்து கொண்டிருக்கிறது. தெலுங்கானாவில் 2018 பாரதிய ஜனதா கட்சி ஒரு எம்எல்ஏ இன்று நானும் அங்கு பிரச்சாரத்திற்கு சென்றேன். உறுதியாக டபுள் டிஜிட் மூலம் உள்ளே வரும் அப்படிதான் கட்சி முன்னேறி வரும். ஒன்றிலிருந்து நூறு அப்படி முன்னேற முடியாது. ஒன்றில் இருந்து ஐந்தாண்டுகள் கழித்து இன்று அதிகமாக இடம்பிடித்து இருக்கிறோம். தெலுங்கானாவில் நான்கு எம்பிக்கள் இருந்தார்கள். 24ல் இன்னும் அதிகமாக இருக்கும்.

2018 இல் கிட்டத்தட்ட ராஜஸ்தானில் ஆட்சியில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை விட்டுக் கொடுத்து 2019 லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெறாது என நினைக்கப்பட்ட நிலையில், இன்று உறுதியாக ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக வெல்கிறது. தெலுங்கானாவில் வாக்குகளை அதிகப்படுத்துவதோடு, எம்எல்ஏக்களை அதிகப்படுத்த இருக்கிறோம். தெலுங்கானாவில் பாஜக கட்சி வந்துவிட்டது. வருகின்ற காலம் பாஜக அதிகமான இடங்களை பிடிக்கும்.

பக்தர்கள், மக்களுடைய மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளது. நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கு காரணம். இது சம்பந்தமாக நமது கட்சியின் தலைவர்கள் நேற்று சந்தித்துள்ளார்கள். உயிரிழந்தவர் குடும்பத்திற்கு பாரதிய ஜனதா கட்சியில் ஆறுதல் கூறப்படும்.

தென் தமிழகத்தில் கொலைகார காடாக மாறிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, கொலைகள் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்க முன்னேற்றம் இல்லை. ஒரு பக்கம் காவல்துறை சரியாக செயல்படாதது ஆளும் கட்சியின் அக்கறை இல்லாமல் போன்றவை தான் இதற்கு காரணம். காவல்துறை சுதாரித்துக் கொண்டு தங்கள் வேலையை சுத்தமாக செய்ய வேண்டும். யாரை எப்போது கைது செய்யலாம் என நினைக்காமல் தங்கள் தொழிலை சுத்தமாக செய்ய வேண்டும்.

காங்கிரஸ் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கான காலம் இந்தியாவில் இல்லை. எனவே பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்னெடுப்பார்கள். எனவே, அவர்கள் அடுத்த ஆறு மாதத்திற்கு காங்கிரஸ் தாங்கள் 2024 இல் லோக்சபா தேர்தலில் எந்த இடத்திலும் ஜெயிக்கப் போவதில்லை. அதனால் குற்றச்சாட்டுகளை முன் வைப்பார்கள்.

மாலத்தீவில் கைதான மீனவர்கள் பற்றிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசி வாயிலாக பேசியிருக்கிறோம். முன்பு கடிதம் அனுப்பி இருக்கிறோம். குறிப்பாக, அவர்கள் தொகையை மத்திய அரசே எடுத்து கட்டி வெளியில் எடுக்க முயற்சிப்பார்கள். முடிந்தவரை தொகையை கட்டாமல் வெளியே கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதம் போட்டால் மத்திய அரசு சார்பில் கட்டிக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

மாலத்தீவில் வரக்கூடிய அதிபர் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள். மாலத்தீவின் அதிபர் எப்போதும் முதல் விசிட் இந்தியாவில் இருக்கும் இந்த முறை எகிப்து சென்றிருக்கிறார்கள். நாம் உறுதியாக மீனவர்களுடன் இருக்கிறோம். மீனவர்கள் பத்திரமாக வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
நாம் சினிமாவுக்குள் அதிகமாக செல்வதில்லை. சினிமாவுக்குள் சென்று விட்டால் வாழ்க்கை முழுவதும் வீணாகிவிடும் இளைஞர்கள் ஆக்கபூர்வமான செயல்களை செய்ய வேண்டும்.

அரசியலுக்கே வரமாட்டேன், அரசியல் வந்தார். எம்எல்ஏவாக மாட்டேன் எனக் கூறினார். தற்போது யாராவது துணை முதல் அமைச்சராக ஆக மாட்டேன் என்றால் கவனமாக இருக்க வேண்டும். அவர் ஆகப் போகிறார் என அர்த்தம் உறுதியாக வரப்போகிறார் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்.

Views: - 287

0

0