2024ல் இந்தியா முழுவதும் பாஜக ஆட்சி… 2026ல் தமிழகத்தையும் ஆளும் : மதுரையில் பாஜக பிரமுகர் சரவணன் நம்பிக்கை

Author: Babu Lakshmanan
10 March 2022, 3:50 pm

மதுரை : 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக இந்தியா முழுவதும் வெற்றி பெறும் என்று பாஜக பிரமுகர் சரவணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்று முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது தற்போது நடைபெற்று வருகின்றது. அதில் மணிப்பூர், கோவா, உத்திரபிரதேசம், உத்திரகாண்ட் உள்ளிட்ட இடங்களில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் முன்னிலையில் உள்ளது, அதை தொடர்ந்து தற்போது அனைத்து மாநிலங்களும் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை அருகில் பாஜக கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் முன்னிலையில், வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி கொண்டாடினர்.

அதைத்தொடர்ந்து செய்திகளை சந்தித்த சரவணன் கூறியதாவது :- தற்போது பிற மாநிலங்களில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல, 2024ம் ஆண்டு இந்தியா முழுவதும் பாஜக ஆட்சி செய்யும். 2026ம் ஆண்டு தமிழகத்தை ஆட்சி செய்யும். மதுரையில் உள்ள எம்பி சு.வெங்கடேசன் பேஸ்புக், டுவிட்டரில் மட்டும் அரசியல் செய்கிறார். அவரை நேராக நிறுத்தினால் மக்கள் யாருக்கும் அடையாளம் தெரியாது.

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி மக்களுக்கு கொண்டு செல்லும் அரசாக செயல்படுகிறது. பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டத்தை இவர் வழங்குவது போல மகளிர் தின விழா அன்று அறிவிக்கின்றார், என கூறினார்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!