ஏலம் நம்பர் 2… SOLD TO PUZHAL… பொன்முடி வழக்கின் தீர்ப்பை ஐபிஎல் பாணியில் கலாய்த்த பாஜக…!!

Author: Babu Lakshmanan
21 December 2023, 4:00 pm
Quick Share

ஐபிஎல் ஏலம் பாணியில் பொன்முடியின் வழக்கின் தீர்ப்பை விமர்சித்து பாஜக போஸ்டர் வெளியிட்டுள்ளது

கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சத்திற்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, கடந்த 2002ம் ஆண்டு அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என அறிவித்தது. இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேலும், இந்த தீர்ப்பின் மூலம் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை உடனடியாக இழந்தார் பொன்முடி.

அதோடு, மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கும் விதமாக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டது. எனவே, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வரை பொன்முடியும், அவரது மனைவியும் சிறைக்கு செல்ல மாட்டார்கள் என்று சொல்லப்பட்டு வந்தது.

இந்த நிலையில், திடீர் திருப்பமாக, தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான உத்தரவை உச்சநீதிமன்றத்தில் 30 நாட்களுக்குள் பொன்முடி பெற வேண்டும் என்றும், தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவு பெறாவிட்டால் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக 30 நாட்களுக்குள் தடை உத்தரவை பெறாவிட்டால், விசாரணை நீதிமன்றம் வாரண்ட் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஐபிஎல் ஏலம் பாணியில் பொன்முடியின் வழக்கின் தீர்ப்பை விமர்சித்து பாஜக போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதில், அவருக்கு கொடுக்கப்பட்ட 3 வருட சிறை தண்டனையை 3 வருட கான்டராக்ட் வருடம்.. 50 லட்சம் அபராதத்தை.. 50 லட்சம் BASE Fine.. sold செய்யப்பட்டது புழல் சிறைக்கு என்று கூறி பாஜக கிண்டலாக போஸ்ட் செய்துள்ளது.

இந்தப் போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 343

0

0