நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் இரு தொகுதிகளில் இடைத்தேர்தல்? மௌனம் காத்த தமிழக அரசு.. அதிமுக அதிரடி முடிவு!

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2024, 5:59 pm
By eleection
Quick Share

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் இரு தொகுதிகளில் இடைத்தேர்தல்? மௌனம் காத்த தமிழக அரசு.. அதிமுக அதிரடி முடிவு!

சமீபத்தில் பாஜகவில் இணைந்த விஜயதாரணி, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து முறைப்படி சட்டப்பேரவை சபாநாயகரிடம் கடிதம் அனுப்பியிருந்தார்.

இதையடுத்து விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலி என அறிவிக்கப்படும். பின்னர் 6 மாதத்தில் அத்தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும்.

இதே போல அமைச்சர் பொன்முடிக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டது. பொன்முடிக்கு தண்டனை வழங்கப்பட்டதால் அவரது எம்எல்ஏ பதவி தானாக காலியாகி விட்டது. உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அவரது அமைச்சர் பதவியும் பறிபோனது.

கிட்டத்தட்ட பதவி பறிக்கப்பட்டு இரண்டு மாதங்களான ஆன நிலையில், சட்டசபைத் தலைவர், திருக்கோவிலூர் சட்டசபைத் தொகுதி காலியாக இருப்பதாக இதுவரை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது. பொன்முடியின் எம்எல்ஏ பதவி காலியானதால்தான் கடந்த சட்டசபைக் கூட்டத் தொடரில் அவர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவரது இருக்கையை இன்னும் அப்படியே தான் வைத்துள்ளார் பேரவைத் தலைவர்.

இந்நிலையில் சட்டசபை செயலர் சீனிவாசனை சந்தித்த அதிமுக எம்எல்ஏக்கள், திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் மட்டுமே லோக்சபா தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 74

0

0