ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டுதான்.. உறுதி செய்த முதலமைச்சர் : வெளியான பகீர் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2024, 7:26 pm
Rameshwaram Cafe
Quick Share

ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டுதான்.. உறுதி செய்த முதலமைச்சர் : வெளியான பகீர் சிசிடிவி காட்சி!!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் மர்ம பொருள் வெடித்தது. முதலில் இது சிலிண்டர் விபத்தாக இருக்கலாம் எனக் கருதப்பட்ட நிலையில், வாடிக்கையாளர் ஒருவர் விட்டு சென்ற பையில் இருந்த பொருள் வெடித்ததாக ஓட்டல் உரிமையாளர் கூறியதாக பெங்களூர் தெற்கு தொகுதி எம்பி தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேஜஸ்வி சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், : ராமேஸ்வரம் கஃபே ஓட்டல் உரிமையாளர் ஸ்ரீ நாகராஜிடம் பேசினேன். வாடிக்கையாளர் விட்டு சென்ற பை ஒன்றே வெடி விபத்துக்கு காரணம் என்று அவர் கூறினார். சிலிண்டர் விபத்து இல்லை எனவும் கூறினார். விபத்தில் ஊழியர் ஒருவர் காயம் அடைந்து இருப்பதாகவும் கூறினார்” என்று பதிவிட்டுள்ளர்.

பெங்களூரு குண்டனஹல்லி இருக்கிறது பிரபல உணவகமான ராமேஸ்வர கஃபே. இந்தப் பெயரில் நகரெங்கும் பல கிளைகள் இயங்குகின்றன. மக்கள் கூட்டம் எப்போது அலைமோதும் இந்த உணவகத்தின் ராஜாஜி நகர் கிளையில் இன்று மதியம் 1 மணி அளவில் பயங்கர வெடிப்புச் சத்தம் கேட்டது.

வெடிகுண்டு வெடித்ததில், உணவகத்தின் முன் பக்கம் சேதமடைந்ததோடு உள்ளே தீ பற்றி எரிந்து கொண்டிருந்ததது. உணவகத்தில் இருந்தவர்கள் சிலர் காயமடைந்திருந்தனர்

இந்தச் சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் பெங்களூரு ஒயிட்ஃபீல்டு காவல் துறையினர் அங்கு விரைந்து சென்றனர். உணவகத்தில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என சிலர் காயமடைந்துள்ளனர். 9 பேர் வரை காயமடைந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

முதலில் சிலிண்டர் விபத்து என சொல்லப்பட்ட நிலையில், வெடிகுண்டு வெடித்து இருப்பதாக கர்நாடக முதல் மந்திரி கூறியுள்ளார். வாடிக்கையாளர் ஒருவர் பையை விட்டு சென்றதாகவும் அவர் வைத்த பையில் உள்ள பொருள் தான் வெடித்து இருப்பதாகவும் சித்தரமையா கூறினார்.

Views: - 89

0

0