சாம்பாரில் பூரான்… இரவு உணவு சாப்பிட்ட செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் 50 பேருக்கு வாந்தி, மயக்கம் : நள்ளிரவில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 October 2022, 11:39 am

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது.

இந்த நிலையில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் நேற்று இரவு மாணவிகளுக்கு உணவாக தோசை மற்றும் சாம்பார் வழங்கப்பட்டுள்ளது.

இதை சாப்பிட்ட மாணவிகளில் 50க்கும் மேற்பட்போர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து அனைவரும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ICU பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து விடுதியில் வழங்கப்பட்ட உணவை சோதித்து பார்த்த போது சாம்பாரில் பூரான் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!