இலங்கைக்கு உடனே இந்திய ராணுவத்தை அனுப்புங்க… இதுக்கு மேல முடியாது : மத்திய அரசுக்கு தமிழகத்தில் இருந்து பறந்த கோரிக்கை!!

Author: Babu Lakshmanan
10 May 2022, 9:59 pm

இலங்கையில் வன்முறை மூண்டுள்ள நிலையில், உடனே இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எதிர்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிலைமை கட்டுக்குள் வராததை உணர்ந்த பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தலைநகர் கொழும்புவில் பிரதமரின் இல்லம் மற்றும் பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது, ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களும் ராஜபக்சே ஆதரவாளர்களை பதிலுக்கு தாக்கினர். இதனால், நாடு முழுவதும் வன்முறை மூண்டது.

மேலும், ராஜபக்சேவின் வீடு உள்பட எம்பிக்கள், மேயர்களின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர். இதனால், அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

twitter - Subramanian Swamy's IT cell head sack ultimatum to BJP -  Telegraph India

இந்த நிலையில், இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அரசியலமைப்புச் சட்டத்தை மீட்டெடுக்க இந்தியா தனது ராணுவத்தை கண்டிப்பாக அனுப்ப வேண்டும். தற்போது மக்களின் கோபத்தை இந்திய எதிர்ப்பு சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன. இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பை பாதிக்கிறது,” எனக் கூறியுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!