இது திராவிட மாடல் ஆட்சியா…? கூட்டணி என்பதற்காக இதுக்கு மேலயும் பொறுத்துக்க முடியாது.. திமுக மீது விசிக காட்டம்..!!!

Author: Babu Lakshmanan
10 May 2022, 6:42 pm
Stalin and thiruma- Updatenews360
Quick Share

கூட்டணி கட்சி என்பதற்காக திமுக செய்யும் கொடுமைகளை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை – ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இளங்கோ தெருவில் அமைந்துள்ள 150க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துத் தள்ளும் பணியில் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழக அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Image

இதனிடையே, வீடுகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் குடியிருந்து வந்த கண்ணன் என்பவர் தீக்குளித்து உயிரிழந்து போனார். அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கும், கண்ணனின் குடும்பத்திற்கும் ஆறுதல் தெரிவித்து விட்டு வருகின்றனர்.

கடந்த 8ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோவிந்தசாமி நகர் மக்களை நேரில் சந்தித்து பேசினார்.

Image

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான வன்னியரசு, உயிரிழந்த கண்ணையன் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது :- தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடந்து வருவதாக கூறுகின்றனர். இந்த ஆட்சி மக்களுக்கானது, சாமானியர்களுக்கானது என்றெல்லாம் சொல்லுகின்றனர். ஆனால், இங்கே மண்ணின் மைந்தர்கள் நிலங்களை ஆக்கிரமித்து விட்டதாகக் கூறி, அவர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்த கண்ணன் என்பவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், ரூ.50 லட்சமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

CM Stalin - Updatenews360

நிலம் அப்புறப்படுத்துவது தொடர்பான பிரச்சனையை அரசு கொள்கை ரீதியில் கையாள வேண்டும். திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதால், தமிழகத்தில் நடக்கும் இதுபோன்ற கொடுமைகளை கண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைதியாக இருக்காது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் குடியிருப்புகளில் இருக்கின்றனர். தேர்வு நடந்து வரும் சூழலில், இதுபோன்ற சூழ்நிலையில் பொதுமக்களை அப்புறப்படுத்தும் செயல்களில் அரசு ஈடுபடுவது நல்லாட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்தும், என அவர் கூறினார்.

Views: - 813

0

0