தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் மாற்றம் : கோடை விடுமுறையை நீட்டித்து அமைச்சர் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 May 2023, 11:55 am
Anbil - Updatenews360
Quick Share

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஜூன் 1-ம் தேதி 6ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும், 1ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த நில நாட்களாக இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என ராமதாஸ், சீமான் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று, பள்ளி திறக்கப்படும் தேதி குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் அவர்கள் ஆலோசனைப்படி வெயிலை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர்அன்பில் மகேஷ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Views: - 350

0

0