ஜனாதிபதி தான் நாடாளுமன்றத்தை திறக்க வேண்டும் : திமுக நிலைப்பாடு இதுதான்.. அமைச்சர் சேகர்பாபு!!!

Author: Udayachandran RadhaKrishnan
26 May 2023, 11:21 am
Sekar Babu - Updatenews360
Quick Share

டெல்லி, சென்ட்ரல் விஸ்டாவில் 970 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்றத்தை ஆளும் பாஜக அரசு கட்டி முடித்துள்ளது. இந்த புதிய நாடாளுமன்றமானது வரும் மே 28இல் திறக்கப்பட உள்ளது.

இதனை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த சமயத்தில், புதிய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும்.

ஆனால், அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறி காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் கூட்டாக புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

மேலும், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நேற்று ரிட் மனுவை தாக்கல் செய்யப்பட்டது. பாஜக அரசு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் திறக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மேலும், பதவியில் உள்ள ஜனாதிபதி திறப்பது தான் ஏற்புடையதாக இருக்

Views: - 66

0

0